மால்வேர் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

malware meaning in tamil

தீம்பொருள் பொருள் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் Malware என்பதின் அர்த்தம் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். Malware  என்பது கணினி சம்பத்தப்பட்ட ஒரு software ஆகும். இவை கணினியில்  மட்டுமல்ல நாம் உபயோகிக்கும் மொபைல் போன்ககளிலும் உள்ளது. இந்த Malware ஆனது கணினியின் செயல்பாட்டை கெடுக்கவும், முக்கியமான தவறுகள் மற்றும் விவரங்களை தெரிந்துகொள்வதற்காக இந்த Malware பயன்படுத்தப்படுகிறது. மேலும் Malware பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பதிவேற்றம் பதிவிறக்கம் என்றால் என்ன

 

Malware meaning in tamil:

Malware என்பது தமிழில் தீங்கிழைக்கு  மென்பொருள் என்று சுருக்கமாக தீப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை கணினி வைரஸ் ஆகும்.

இவை கணினியின் உள்ள முக்கிய விவரங்களை சேகரிப்பதற்காகவும்  ஒருவரின் அனுமதி இன்றி அவர்களின் கணினிகளின்  விவரங்களை தெரிந்து கொள்வதற்காக ஹேக்கர்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் என்று கருதப்படுகிறது. ஒருவரின் தகவலை மற்றவருக்கு அனுப்பிக்கொண்டு இருக்கும். எடுத்துக்காட்டாக ஆன்லைன் விளம்பரங்களின் மூலம் இந்த லிங்க்கை கிளிக் செய்தால்  உங்களுடைய மொபைல் எண்ணிற்கு இலவசமாக ரீசார்ஜ் ஏறிவிடும் என்று ஹேக்கர்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டு மற்றவர்களின் தகவல்களை பெற்றுக்கொள்கிறது. 

இந்த malware ஆனது வேர்ம்கள், கணினி வைரஸ்கள், ட்ரோஜன் ஹார்சுகள் , ரூட்கிட்கள், வேவுபொருள், குற்றபொருள் மற்றும் பிற தீங்குகளை விளைவிக்கும் தேவையற்ற மென்பொருள்களை உள்ளடக்கியவையாகும்.

தீப்பொருள் என்பது குறைகளை உடைய மென்பொருள்களை ஒத்தது என்றும் கேடுகளை விளைவிக்க கூடியது என்றும் சொல்லப்படுகிறது. தீப்பொருள் ஆனது குற்றவாளிகளிலிருந்து  பயனாளர்கள் மூலம் இணையம் வழியாக கடத்தப்படுகின்றன.

Malware வைரஸ் இருக்கும் பொழுது கணினியின் வேகமும், அதன் இணையத்தின் வேகமும் குறைவான செயல்பாடுகளில் இருக்கும்.

இந்த malware வைரஸ்  பிரச்சனைகள் நாம் உபயோகிக்கும் மொபைல் போன்களில் ஏற்படும் பொழுது  மொபைலில் உள்ள நெட்கள் திருடப்படுகிறது.  பிறகு மொபைல் தானாகவே அதனுடைய செயல்திறனை இழந்துவிடுகிறது.

Malware virus attack in tamil:

  • malware வைரஸ் கணினியில் இயங்கும்பொழுது கணினி செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படும்.
  • தேவையில்லாத பாப்-ஆப் விளம்பரங்கள் வரும்.
  • கணினியை உபயோகிக்கும் பொழுது தொடர்ச்சியான வைரஸ் தடுப்பு அறிவிப்புகள்
  • கணினியின்  செயல்திறன்கள் மெதுவாக இயங்கும்.
  • திடீரென கணினி மறுதொடக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • கணினி இணைப்புகளுடன் தெரியாத மின்னஞ்சல்கள் வந்து செல்லும்.
  • தெரியாத மென்பொருள் நிறுவல்கள்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil