Mammogram Meaning in Tamil
பொதுவாக நமது உடலில் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெறுவோம். அப்படி நம் ஆலோசனை பெரும் போது மருத்துவர் நமது உடல்நிலைக்கு ஏற்ப மாத்திரை, மருந்துகளை எழுதி தருவார்கள். அதுமட்டுமில்லாமல் ரத்த டெஸ்ட், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவையும் எடுக்க சொல்லுவார்கள்.
நமக்கு ஸ்கேன் எடுக்க சொல்கிறார்கள் என்று தெரியும், ஆனால் அந்த ஸ்கேன் எதற்காக எடுக்கப்படும் ஸ்கேன் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நாம் மருத்துவர் எந்த டெஸ்ட் எடுக்க சொன்னாலும் அதனை பற்றிய விவரத்தை ஓரளவிற்காவது அறிந்தறிருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Mammogram என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
மேமோகிராம் என்றால் என்ன.?
புற்றுநோய்களில் பெண்களை அதிகமாக தாக்க கூடியது மார்பக புற்றுநோயாக இருக்கிறது. இந்த புற்றுநோய் பாதித்தால் உயிர் போகும் என்ற பயம் போகிவிட்டது. ஏனென்றால் புற்றுநோய் மட்டுமில்லை எந்த நோயாக இருந்தாலும் சரி வருவதற்கு முன்னே அதனை அறிந்து கொள்வதற்கு பல தொழில்நுட்ப வசதிகள் வந்துள்ளது.
இன்சொல் என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா
அந்த வகையில் புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் அதனை வென்று விடலாம். அதாவது புற்றுநோய் வருவதற்கு முன்னே அதன் அறிகுறிகளை அறிந்து கொண்டால் அதனை ஆரம்ப கட்டத்திலே வென்று விடலாம். அந்த வகையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மேமோகிராம் பரிசோதனை குறித்து தெரிந்து கொள்வோம்.
மேமோகிராம் என்பது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அறிகுறிகள் இருந்தலும் சரி, இல்லையென்றாலும் சரி அவர்களுக்கு மார்பகம் புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவர்கள்மேமோகிராம் டெஸ்ட் எடுக்க சொல்கிறார்கள்.
மேமோகிராம் என்பது மார்பக பகுதியை எடுக்கும் ஒரு எக்ஸ்ரேவாக இருக்கிறது. இந்த டெஸ்ட்டை வைத்து புற்று நோயானது எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்டறிய முடியும்.
Den என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |