மாங்கல்யம் தந்துனானே மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Mangalyam Tantunanena Meaning in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் அனைவருக்குமே கல்யாணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரத்தை கூறுவார்கள். இந்த மந்திரத்தின் அர்த்தம் என்னவா இருக்கும் என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் யோசித்து இருப்போம். அப்படி யோசித்து அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கல்யாணத்தில் கூறப்படும் மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரத்தின் அர்த்தத்தை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். கல்யாணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது ஐயர் கூறப்படும் மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரத்தின் பொருளை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், இப்பதிவின் வாயிலாக அதற்கான மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரத்தின் அர்த்தத்தை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Mangalyam Tantunanena Mantra:

 மாங்கல்யம் தந்துனானே பாடல் தமிழ் அர்த்தம்

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

Mangalyam Tantunanena Meaning in Tamil:

மாங்கல்யம் தந்துனானே மந்திரம் ஆனது, மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக கூறப்படும் மந்திரமாகும்.

“மங்கலமான பெண்ணே உன்னோடு இன்று நான் துவங்கும் இந்த இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,” என்பது அர்த்தம் ஆகும்.

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக உள்ளது எதுவென்றால் அது அவனுடைய மனைவியே.. மற்றவை எல்லாம் மனைவிக்கு பிறகே. ஒரு மனிதன் வாழ்க்கையில் ஆட்சி, அதிகாரம், செல்வங்கள் என அனைத்தையும் இழந்து நின்றாலும், அவனிடம் கடைசி காலம் வரை துணையாக இருப்பது அவனின் மனைவி மட்டுமே. அதனை உணர்த்தும் விதமாக, திருமணத்தின் போது “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்ற மந்திரம் கூறப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள் 
Akaay (அகாய்) என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?
Call Log Was Deleted Meaning in Tamil- Call Log என்பதன் அர்த்தம்!
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement