Michaung (மிக்ஜாம்) என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன.? | Michaung Meaning in Tamil

Advertisement

Michaung Meaning in Tamil

Michaung (மிக்ஜாம்) என்ற வார்த்தை சமீபத்தில் அதிக பிரபலமடைந்து வருகிறது. இப்பெயர் புயலுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் ஆகும். இந்த புயலுக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்..? Michaung என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன.? என்பதை பற்றிய விவரங்களை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளல்லாம் வாங்க. மிக்ஜாம் புயல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் ஆகும். இந்த புயல் வங்காள விரிகுடாவில் நான்காவது புயலாகவும் இந்திய கடல் பகுதியில் ஆறாவது இடமாகவும் உள்ளது.

மிக்ஜாம் புயல், வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியிலும் சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆராய்ச்சி நிறுவனம் இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) அறிவித்துள்ளது. எனவே, இந்த புயலுக்கு Michaung என பெயர் வந்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Michaung Cyclone Meaning in Tamil:

Michaung Cyclone Meaning in Tamil

இந்த புயலுக்கு மியான்மர் நாடு, Michaung Cyclone (மிக்ஜாம் புயல்) என்று பெயர் சூட்டியுள்ளது. மிக்ஜாம் என்றால் வலிமை, மீள்தன்மை, விரியும் திறன், சக்திவாய்ந்த  போன்ற அர்த்தங்களை குறிக்கிறது.

அதாவது, வங்காள விரிகுடாவில் உருவாக்கி உள்ள இந்த புயல் அதிக வலிமை உடையதாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது என்பதால் மிக்ஜாம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மிக்ஜாம் (வலிமை) என்ற பெயருக்கு ஏற்றவாறு இந்த புயல் ஆனது, அதிகபட்சமாக மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறப்படுகிறது.

இதன் பெயருக்கு ஏற்றவாறு சென்னை உட்பட பல இடங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்
Artisam என்றால் என்ன தெரியுமா
Affiliated என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்
Poppet என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement