மித்ரன் பெயர் அர்த்தம் – Mithran Meaning in Tamil

Advertisement

மித்ரன் பெயர் அர்த்தம்

வணக்கம் வாசகர்களே.. இன்று நாம் பார்க்க இருப்பது மித்ரன் என்ற பெயரின் அர்த்தம் என்ன என்பதை பற்றி தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் உங்கள் குழந்தைக்கு நீங்கள் வைக்க கூடிய பெயர் தான் அவர்களுடைய எதிர்காலத்தை முன்னேற்றகரமானதாகவும், வளர்ச்சிகரமானதாகவும் இருக்கும் மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை பெறுவதற்கும் உதவும்.

ஆக உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது மிக கவனமாகவும், அர்த்தமுள்ளதாகவும் வைக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் செல்ல ஆண் குழந்தைக்கு மித்ரன் என்ற பெயர் சுட்டுகிறீர்கள் என்றால் அந்த பெயருக்கான அர்த்தம், தோற்றம், நியூமராலஜி எண், எந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த பெயரை சூட்டலாம் எனது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

Mithran Meaning in Tamil | Mithran Name Meaning in Tamil

பெயர் மித்ரன்
பொருள் சூரியன், ஒளி மற்றும் உண்மையின் கடவுள், சூரியனின் பிரகாசமான, கதிரியக்க மற்றும் புகழ்பெற்ற ஒளி
பாலினம் ஆண்
மதம் இந்து
தோற்றம் இந்தியன்
பெயரின் எண்ணிக்கை 7
ராசி  சிம்மம் 
நட்சத்திரம்  மகா (மா, மீ, மு, மி)

மித்ரன் பெயர் பற்றி

மித்ரன் என்பதன் அர்த்தம் சூரியன், ஒளி மற்றும் உண்மையின் கடவுள், சூரியனின் பிரகாசமான, கதிரியக்க மற்றும் புகழ்பெற்ற ஒளி என அர்த்தங்களை குறிக்கிறது.

மித்ரன் என்பது ஆண் குழந்தை பெயர் ஆகும். பொதுவாக மித்ரன் என்ற பெயர் கொண்டவர்கள் நேர்மறை எண்ணம் கொண்டவராக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் ஆடம்பரமான, அதிகாரம் நிறைந்த மற்றும் வேலையாட்களால் பின்பற்றப்படும் வாழ்கை வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள்.

இவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது உள்நாட்டுத் துறையிலோ, அவர்கள் உயர் அதிகாரத்தை பெற விரும்புகிறார்கள். அங்கீகாரம் என்பது அவர்கள் கனவு காணும் ஒன்று.

இந்த பெயர் உடையவர்கள் தனிமையை விரும்ப மாட்டார்கள். எப்போதும் நண்பர்களுடன் இருப்பதற்கு விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். தன்னுடைய நேரத்தை நண்பர்களுடன் கழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தன்னிடம் வந்து யாரும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் எந்த செயலையும் பொறுமையாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவருடைய தோற்றம் பலரை ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

மித்ரன் என்ற பெயருக்கு அதிர்ஷ்ட எண்ணாக இருப்பது 11 ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மித்ரா பெயர் அர்த்தம்

மித்ரன் என்ற பெயரின் ஒவ்வொரு (M, I, T, H, R, A, N) எழுத்துக்களுக்கான அர்த்தம்:

M இவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள், மதவாதியும் கூட, உன்னதமானதாக மற்றும் இதயத்தால் பக்தியுள்ளவர், இறக்கமுள்ளவர்களாக இருப்பீர்கள், பயணம் செல்ல விரும்புபவர்கள்.
I உங்களிடம் கூர்மையான அம்சங்கள் உள்ளன. படிப்பில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நீங்கள் நல்ல ஹோம் மேக்கர். உங்களுக்கு சமையலில் அதிக ஆர்வம் இருக்கும்.
T நீங்கள் இதயத்தால் தேசபக்தர். நல்ல மனிதராக இருப்பீர்கள், நன்கு உண்ணக்கூடிய நபர்
H நீங்கள் மிகவும் புத்திசாலி. நீங்கள் பிறப்பால் திறமைசாலியாக இருப்பீர்கள். மேலும் நீங்க அழகாக கையெழுத்து எழுதுவீர்கள்.
R உங்களின் உதவி கேட்பவர்களுக்கும், துன்பத்தில் உள்ளவர்களுக்கும் உதவி செய்வீர்கள்.
A நீங்கள் கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
N உங்களிடம் கனிவான உள்ளம் இருக்கும். உங்களிடம் பேச்சு திறமை இருக்கும்.

மகிழ் மித்ரன் பெயர் அர்த்தம்:

மகிழ் என்றால் மகிழ்ச்சி, மித்ரன் என்றால் நண்பன் என்று பொருளப்படும். ஆகவே மகிழ் மித்ரன் என்றால் மகிழ்ச்சியின் நண்பன் என்று பொருள்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நதியா பெயர் அர்த்தம்

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement