Montessori meaning in tamil
நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். அதாவது எனக்கு தான் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் மற்றவர்களிடம் இருந்து நான் மிகவும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். அதற்கு முதலில் நமக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி நமக்கு அனைத்து தகவல்களும் தெரிய வேண்டும் என்றால் முதலில் நாம் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நாம் அன்றாட வாழ்க்கையில் பலவகையான வார்த்தைகளை பேசி வருகின்றோம். அப்படி நாம் பேசும் வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். எனவே தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த அவரிசையில் இன்றைய பதிவில் Montessori என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Montessori Education in Tamil:
Montessori | மாண்டிசோரி :
மாண்டிசோரி என்பது ஒரு கல்வி முறையாகும்.
மான்டேசொரி கல்வி, குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட கல்வி முறையாகும்.
இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி எனும் பெண்மணியால் இந்த கல்வி முறையை உருவாக்கினார்.
அவரின் பெயரிலே இந்த கல்வி முறை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த கல்வி முறை குழந்தைகளை சுயமாக இயக்க செயல்பாடு, கற்றல் மற்றும் கூட்டு விளையாட்டு ஆகியவற்றை கொண்டதாக உள்ளது.
குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பியதை கற்றுக்கொள்ளவும், தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ளவும் இந்த கல்விமுறை சுதந்திரம் அளிக்கப்படுகிறது.
கல்விச்சூழல் குழந்தைகளின் வயது, ஆர்வம் மற்றும் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப அமைத்திருப்பதை இந்த கல்வி முறை உறுதி செய்கிறது.
குழந்தை தங்களால் கையாளக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி, கற்றலை மேற்கொள்ள உதவுகிறது.
ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்த இந்த கல்வி முறை உதவுகிறது.
Globetrotter என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |