MTS என்பதன் முழு விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம்..!

Advertisement

MTS என்பதன் அர்த்தம் – MTS Meaning in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்..  இன்றைய காலகட்டத்தில் நாம் பல வார்த்தைகளை சுருக்கி பயன்படுத்திவருகின்றோம். காலங்கள் பல சென்ற பின்னர் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை மறந்து விடுகின்றோம். அப்படித்தான் OK, GO போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமலே பயன்படுத்துகின்றோம்.

ஆங்கிலத்தில் உள்ள சுருக்கமான எழுத்துக்களுக்கு அதனுடைய முழு விரிவாக்கம் என்ன? மற்றும் அதனுடைய அர்த்தம் என்ன என்று தினமும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று நாம் MTS என்பதன் முழு விரிவாக்கம் என்ன மற்றும் அதன் அர்த்தம் என்ன என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

MTS என்பதன் முழு விரிவாக்கம்:

Multi Tasking Staff என்பது MTS என்பதன் ஆங்கில விரிவாக்கம்.

இது ஒரு பணியாகும், இந்த பணியை பெறுவதற்கு என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும், இதற்கான பணிகள் என்ன, இந்த பணிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்

Multi Tasking Staff பணிக்கு என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும்?

SSC நடத்தும் தெரிவில் நாம் வெற்றிபெறும் என்றால் இந்த MTS பணி நமக்கு கிடைக்கும். இதற்கு என்ன கல்வி தகுதி என்றால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC என்பது இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது, இது இந்திய அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.

MTS பணியாளர்கள் பொதுவாக Records Maintaining, Sending fax, Computer Related Work, Dispatch Maills, Vehicles Driving போன்ற பலவகையான பணிகள் இருக்கும். ஆக நீங்கள் எந்த அலுவலகத்தில் பணிபுரிய போகிறீர்களா அந்த அலுவலகத்தை பொறுத்து உங்களுக்கு வேலை இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த MTS பணிக்கு 18 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை மதசம்பளம் வழங்கபடுகிறது. மேலும் இன்கிரிமெண்ட் என்பது இவர்களுக்கு வருடத்திற்கு 3 சதவீதம் உயர்த்துவார்கள்.

ப்ரோமோஷனை பொறுத்தவரை சீனியாரிட்டி பொறுத்து ப்ரோமோஷன் கிடைக்கும், மற்றும் இந்த MTS பணியில் இருந்துகொண்டு PA/SA பணிக்கு தேர்வுக்கு முயற்சிப்பதன் மூலமும் MTS பணியாளர்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Who Meaning in Tamil – Who தமிழ் பொருள்

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement