Narcissist என்றால் என்ன தெரியுமா..?

Advertisement

Narcissist Meaning in Tamil

பொதுவாக இந்த உலகில் மொழிகளை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதிலும் குறிப்பாக ஒரு மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தை மாற்றமொழிகளில் அறிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு செய்யலாகும். உதாரணத்திற்கு நமது தாய்மொழியான தமிழ் மொழி நமக்கு பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும். இதுவே ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தமிழ் மொழியில் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது மிகவும் கடினமான ஒரு செய்யலாகிவிடும். ஏனென்றால் ஆங்கில மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு தமிழ் மொழியில் இரண்டு மூன்று அர்த்தங்கள் இருக்கும்.

அப்படி இருக்கும் பொழுது அதற்கான சரியான அர்த்தம் எதுவென்று நமக்கு மிகவும் குழப்பமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் இப்படி தமிழ் மொழியில் இரண்டு மூன்று அர்த்தங்களை கொண்ட அங்கில மொழி வார்த்தைகளுக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று Narcissist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

நாசீசிஸ்ட் என்றால் என்ன..?

Narcissistic meaning in tamil

Narcissist அல்லது Narcissistic Personality Disorder என்பது நீண்ட காலமாக ஒருவரின் மனதிற்குள் நிலவும் ஆளுமை சீதைவு என்பது ஆகும். இந்த ஆளுமை சிதைவு குறைபாடு உள்ளவர்கள் பொதுவாக தங்களின் சுயநலத்தை பற்றி மட்டுமே சிந்தனை செய்வார்கள்.

அதாவது இவர்களுக்கு என்ன தேவையோ அதைமட்டும் தான் செய்வார்கள் விரும்புவார்கள் மற்றும் மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யமாட்டார்கள். ஆனால் இவர்களை மற்றவர்கள் அதிகமாக பாராட்டவேண்டும் என்று நினைப்பார்கள்.

Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

இந்த பாதிப்பை உடையவர்கள் பொதுவாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றியோ, வெற்றியை அடைவது பற்றியோ, அவர்களின் தோற்றத்தைப் பற்றியோ சிந்திப்பதில் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

இவர்கள் பொதுவாக தன்னை சுற்றியுள்ள மக்களை தனது தேவைக்காக பயன்படுத்தி கொள்ள மட்டுமே நினைப்பார்கள். இந்த பாதிப்பு பொதுவாக ஒருவரின் இளமைக்காலத்தில் ஆரம்பித்து பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக அதிக அளவு மோசமான நிலைகளை வெளிக்காட்டும்.

குறைபாட்டிற்கான காரணங்கள்:

இந்த ஆளுமை சிதைவு குறைபாட்டிற்க்கான சரியான கரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் இதற்கான சிகிச்சைகளும் இன்னும் கண்டறியப்படவில்லை.

குறைபாடு உள்ளவராகக் கருதப்படும் ஒருவரை மருத்துவ நிபுணர்களுடன் நேரடியாக பேச வைப்பதன் மூலமே அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பது கண்டறியப்படுகிறது.

பொதுவாக இந்த குறைபாட்டினை கொண்டிருக்கும் நபர்கள் தங்களிடம் ஒரு பிரச்னை இருப்பதாக உணராமல் இருப்பதால் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானதாக இருப்பதாக பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றன.

 

தொடர்புடைய பதிவுகள் 
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா
 Myositis என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா
Hedging என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
VRS என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement