நாத்தனார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

Advertisement

Nathanar Meaning in Tamil | Nathanar Enbathan Artham 

நமது சொந்தங்களை நாம் ஒவ்வொரு முறை சொல்லித்தான் அழைப்போம், சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அண்ணா, தங்கச்சி என்றெல்லாம். இதெல்லாம் அனைவர்க்கும் மிக எளிதாக தெரியக்கூடிய உறவுமுறையாகும். சில உறவுமுறைகள் தான் நம்மை குழப்பும், அவை குழப்பமாக இல்லையென்றாலும் ஏன் இப்படி கூப்பிடுக்கின்றோம் என்றுதெரியாமலே  எல்லாரும் கூப்பிடுவார்கள். அப்படி பட்ட ஒரு உறவு முறையான நாத்தனார் என்பதன் அர்த்தம் என்னவென்று தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.

இது போன்ற நிறைய விதமான தகவல்களை எங்களது இணையத்தளம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Nathanaar Tamil Meaning 

பொதுவாக நாத்தனார் என்ற சொல்லுக்கு அர்த்தமாக நாம், கணவருடைய உடன்பிறந்தவர் அதாவது கணவரின் சகோதரியை தான் நாத்தனார் என்று கூறுவோம். இது பொது கருத்தாகும். ஆனால் இதன், உண்மையான அர்த்தம் என்னவென்று கூர்ந்து நோக்கினால் அது விரிவாக நிறைய பொருளை உள்ளடக்கும்.

இப்படி ஒவ்வொரு நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்நோக்கி பார்த்தால் நிறைய விதமான அர்த்தங்கள் இருக்கும்.

Mulethi தமிழ் அர்த்தம்

Nathanaar Meaning in Tamil 

நாத்துணையார் என்ற சொல்லே இந்தக்காலத்தில் நாத்தனாராக மாறிவிட்டது.  இதன் விரிவாக்கம் நாக்குக்கு துணை என்பதாகும். ஏன் அப்படி சொல்வார்கள் என்றால், திருமணம் ஆகி வரும் பெண்கள் வீட்டில் பெரும்பாலும் பெரியவர்களே இருப்பார்கள். அவர்களது வயதில் அல்லது அவர்களது வயதிற்கு குறைந்தும் அல்லது அதிகமாக இருக்கும் தனது கணவருடைய உடன்பிறந்த சகோதரியை நாக்குக்கு துணை என்பார்கள்.

அதாவது அவர்களுக்கு பேச்சுத்துணையாக இருப்பார்கள், அதனால் அவர்களை அப்படி சொல்வார்கள். இது அப்படியே மாறி நாத்தனார் என்ற சொல்லாக மாறிவிட்டது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link 

 

Advertisement