நோன்பு துறக்கும் போது சொல்ல வேண்டிய நிய்யத்

Advertisement

Nombu Thirakum Niyat in Tamil

இந்துக்கள் முறையில் திருவிழா வர போகிறது என்றால் அந்த ஒரு வாரத்திற்கு வீட்டில் விரதம் இருப்பார்கள். பால்குடம் அல்லது காவடி எடுக்க போகிறார்கள் என்றால் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். அதுவே திருவிழா அன்று காலையிலிருந்து ஏதும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். அது போல இஸ்லாமியர்களில் ரம்ஜான் வர போகிறது என்றால் ஒரு மாதத்திற்க்கு விரதம் இருப்பார்கள். இந்த விரதம் ஆனது அதிகாலையிலே சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தை அவர்கள் நோன்பு என்று கூறுவார்கள்.

இந்த நோன்பு இருக்கும் போது ஆரம்பிக்கும் போதும் சரி, முடியும் போதும் சரி நிய்யத் கூறி தான் சாப்பிட வேண்டும். இந்த நிய்யத் மற்றும் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

நிய்யத் அர்த்தம்:

நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை.

நோன்பு துறக்கும் நிய்யத்:

அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

அர்த்தம்:

யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு இருந்தேன். உன் மீது கொண்ட அன்பினால் உன்னை முழுதாக நம்பினேன். உங்கள் மீது நம்பிக்கையை வைத்தேன். உன்னுடைய அனுமதியோடு நோன்பை திறக்கிறேன். என்னுடைய நோன்பை ஏற்றுக்கொள்வாயா என்பது அர்த்தமாக இருக்கிறது.

நோன்பு வைக்கும் நிய்யத்:

நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா

அர்த்தம்:

இந்த வருடத்தின் நோன்பை நாள் முழுவதும் அல்லாவுக்குக்காக நோன்பு நோற்பதாக நிய்யத்து வைக்கிறேன் என்பது அர்த்தமாக இருக்கிறது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement