Nostalgic என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா ?

Advertisement

Nostalgic Meaning

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் nostalgic என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Nostalgic meaning in tamil:

Nostalgic என்ற சொல்லுக்கான அர்த்தம் ஏக்கம் ஆகும்.

அதாவது ஒரு நபர் தனிமையாக உணரும் போது தனது கடந்த காலங்களின் நினைவுகள் தோன்றும் அந்த நிலை தற்போது இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற நிலை.

Nostalgic என்பது  கடந்த காலத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் அல்லது சற்று வருத்தமாகவும் இருக்கும் நிலை ஆகும்.

nostalgic meaning in tamil

அதாவது பணியின் காரணமாக குடும்பத்தை விட்டு தனியாக இருக்கும்போது தனது குடும்பத்தினை பற்றிய நினைவு அவரை கவலை கொள்ள செய்யலாம். அல்லது அவர்களுடன் இருந்த மகிழ்ச்சியான நினைவுகள் அவருக்கு இப்போது சந்தோசத்தை வழங்கலாம்  அந்த குறிப்பிட்ட இறந்தகாலத்தினை பற்றிய உணர்வு Nostalgic  ஆகும்.

எடுத்துக்காட்டு:

  • குழந்தைகளை பார்க்கும் போது எனது குழந்தை பருவத்தின் நினைவுகள் ஒரு ஏக்க உணர்வைத் தருகிறது.
  • கல்லூரி கால நாட்களின் நினைவு என்னை மிகவும் மகிழ்விக்கிறது.
  • நினைவுகளின் இனிமை என்னை மனநிறைவைத் தருகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement