Nota Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நோட்டா என்றால் என்ன.? (Nota Meaning in Tamil) என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. தேர்தல் நேரத்தில் நோட்டா என்பதை நாம் அனைவரும் கேட்டு இருப்போம். ஆனால், நோட்டா என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் நோட்டா என்றால் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் நோட்டா பற்றிய விவரங்களை விவரித்துள்ளோம்.
நீங்கள் Nota பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் Nota Meaning in Tamil என்பதையும் நோட்டாவை அறிமுகம் செய்த முதல் நாடு எது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
Nota என்பதன் அர்த்தம் என்ன.?
Nota என்பதன் விரிவாக்கம் None of the Above ஆகும். அதாவது, நோட்டா என்றால் அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். வாக்களிக்கும்போது எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் NOTA பட்டனை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.
இந்த சட்டம் ஆனது, உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, NOTA பட்டனை வாக்கு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. NOTA BUTTON வாக்கு இயந்திரத்தில் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும். எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் இந்த பட்டனை அழுத்தலாம். தமிழ்நாட்டில் நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
நோட்டாவை அறிமுகம் செய்த முதல் நாடு:
- Nota (None of the Above) பட்டனை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா ஆகும். நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |