OC Meaning in Tamil
OC என்பது பலரும் பயன்படுத்த கூடிய வார்த்தை. இதை பல இடங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும் போது பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டிற்கு உங்களுக்கு தெரிந்தவர் சாக்லேட் கொடுத்திருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அதை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் அல்லது உங்கள் நண்பருக்கு கொடுக்கிறீர்கள். அந்த நண்பர் உங்களை பார்த்து என்ன OC சாக்லெட்டா என்று கேட்பார்கள். இதற்கு நீங்கள் புரிந்து கொண்ட அர்த்தம் நீங்கள் காசு கொடுத்து வாங்காமல் வேறொருவர் வாங்கி கொடுத்தால் அதனை OC என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கான அர்த்தம் இது இல்லை. OC வார்த்தைக்கான அர்த்தத்தை இந்த பதிவின் மூலமாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
OC Meaning in Tamil:
பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது தபால் நிலையங்களில் அனுப்பப்படும் கடிதங்களை இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு கடல் வழியாக அனுப்பினார்கள். இந்த கடிதங்களுக்கு எடைக்கு தகுந்தது போல் கட்டணமும் வசூலித்தனர்.
நாளடைவில் அலுவலகங்கள் சார்ந்தவைக்கு எதற்கு கட்டணம் என்று நினைத்து OCS ( On company service) என்ற முத்திரை இருக்கும். இந்த முத்திரையை பயன்படுத்தி இலவசமாக கடிதங்களை அனுப்பினார்கள். இதுவே OCS என்பதை மக்கள் நாளடைவில் என்று OC என மாறிவிட்டது. OC என்றால் இலவசம் என்று நினைத்து இதனை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |