Octane Meaning in Tamil
நமது அறிவுத்திறனை வளர்த்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.ஆனால் அது தான் கிடையாது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் நமது அறிவு திறன் வளராது, அதனை தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய வேண்டும். ஏன் இந்த சொல்லிற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளுக்கே பல அர்த்தங்கள் தெரியாமல் இருக்கிறது. அப்படி நமக்கு தெரியாத வார்த்தைகளின் அர்த்தம் மிக சிறியதாக தான் இருக்கும். ஆனால் நமக்கு தெரிவதில்லை. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் நமக்கு பல தகவல்களை வழங்குகிறது. அத்தகைய சொற்களை முதலில் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் Octane என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Octane Meaning :
ஆக்டேன் என்பது ஆல்க்கேன் வகைச் சேர்மங்களுள் ஒன்று. அது கிளைவிடாத நீண்ட சங்கிலியாக ஒற்றைக் கரிம பிணைப்புக் கொண்டிருக்கும். இதன் வேதி வாய்ப்பாடு CH3(CH2)6CH3 ஆகும்.
ஆக்டேன் பெட்ரோலின் ஒரு மூலப்பொருளாகும். ஆக்டேன் ஆவியாகும் மற்றும் மிகவும் எரியக்கூடிய தன்மை கொண்டது.
பெட்ரோலிலுள்ள, அதன் தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும், ஒரு வேதியியல் பொருள் ஆக்டேன் ஆகும்.
ஆக்டேனுக்குப் 18 வடிவங்கள் உள்ளது.
அவை:
- ஆக்டேன் ( n- ஆக்டேன்)
- 2-மெத்தில்ஹெப்டேன்
- 3-மெத்தில்ஹெப்டேன் (2 என்ன்டியோமர்கள் )
- 4-மெத்தில்ஹெப்டேன்
- 3-எத்தில்ஹெக்ஸேன்
- 2,2-டைமெதில்ஹெக்ஸேன்
- 2,3-டைமெதில்ஹெக்ஸேன் (2 என்ன்டியோமர்கள்)
- 2,4-டைமெதில்ஹெக்ஸேன் (2 என்ன்டியோமர்கள்)
- 2,5-டைமெதில்ஹெக்ஸேன்
- 3,3-டைமெதில்ஹெக்ஸேன்
- 3,4-டைமெதில்ஹெக்ஸேன் (2 என்ன்டியோமர்கள் + 1 மீசோ கலவை )
- 3-எத்தில்-2-மெத்தில்பென்டேன்
- 3-எத்தில்-3-மெத்தில்பென்டேன்
- 2,2,3-ட்ரைமெதில்பென்டேன் (2 என்ன்டியோமர்கள்)
- 2,2,4-டிரைமெதில்பென்டேன் (ஐசோக்டேன்)
- 2,3,3-டிரைமெதில்பென்டேன்
- 2,3,4-டிரைமெதில்பென்டேன்
- 2,2,3,3-டெட்ராமெதில்புடேன்
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்–> Remedy என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com