ஊடல் என்றால் என்ன அர்த்தம்.?

Advertisement

ஊடல் என்றால் என்ன.? | Oodal Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஊடல் என்றால் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஊடல் என்ற வார்த்தையினை நாம் அனைவருமே கேட்டு இருப்போம். ஆனால், ஊடல் என்றால் என்ன என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை நாம் அனைவருமே தெரிந்துகொள்ள விரும்புவோம். எனவே, நீங்கள் ஊடல் என்றால், என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

என்னதான் நாம் தமிழ்மொழி பேசினாலும், தமிழில் உள்ள பல்வேறு சொற்களுக்கான அர்த்தம் பற்றி தெரிவதில்லை. அவற்றில் ஓன்று தான் ஊடல். ஊடல் என்பதை நாம் புத்தகத்தில் படித்து இருப்போம். ஊடல் என்பது உறவில் ஏற்படும் ஒரு வகையான நடத்தை உணர்வு ஆகும். இது பெரும்பாலும் கணவன் மனைவி அல்லது காதலர் காதலர்களுக்கு ஏற்படும் சிறிய கோபம்/வருத்தம் என்று கூறப்படுகிறது. எனவே, ஊடல் பற்றி பின்வருமாறு விவரமாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Oodal Endral Enna in Tamil:

ஊடல் என்றால் பொய்க்கோபம் ஆகும். உறவில் கருத்து வேறுபாட்டால் ஏற்படும் சிறிய பிணக்கு/கோபம்/சண்டை ஆகும். ஊடல் என்பது சிறிது காலம் தான். அதன் பிறகு சமாதானம் ஆகி விடுவார்கள். தலைவி ஊடல் கொண்டு தலைவனை பிரிந்து செல்கிறாள் என புத்தகத்தில் படித்து இருப்போம். எனவே, ஊடல் என்பது ஒரு பொய்க்கோபம், சிறிய பிணக்கு என்று பொருள்கொள்ளலாம்.

ஊடல் என்றால் என்ன

வாழ்க்கையில் ஊடல் என்பது இருக்க வேண்டும்.  ஒருவர் வேடிக்கையான காரணங்களுக்காக கோபத்தை வெளிப்படுத்துகிறார், மற்றவர் அவர்களுக்கிடையே விஷயங்களைச் சரிசெய்ய முயற்சிக்கிறார். அவர்களுக்கிடையேயான மோதல் , குழந்தையின் கோபத்தைப் போல எளிதில் மறைந்து குறுகியதாக இருந்தால் மட்டுமே ஊடல் என்று அழைக்கப்படும். அதாவது, உறவுகளுக்கு இடையே ஏற்படும் பொய்யான கோபம்/சண்டை தான் ஊடல் ஆகும். திருக்குறளில் ஊடல் பற்றி தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

அணிமணி கெச்சம் என்றால் என்ன.?

திருக்குறள் – 1

ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரித்தற்று

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும் என்பது இக்குறளின் பொருள் ஆகும்.

திருக்குறள் – 2

அலந்தாரை அல்லா நோய் செய்தற்றால் தம்மை
புலத்தாரை புல்லா விடல்

ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும் என்பது இதன் பொருள் ஆகும்.

எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • கணவன் மனைவி இடையே ஒரு சிறிய ஊடல் அவ்வளவு தான்.
  • தலைவி ஊடல் கொண்டு தலைவனை பிரிந்து செல்கிறாள்.
  • ஊடலும் கூடலும் சேர்ந்தது தான் வாழ்க்கை.

ஊடல் in English:

ஊடல் என்பதை ஆங்கிலத்தில் Bouderie, Love-Quarrel என்று கூறுவார்கள்.

பிரயாணம் என்றால் என்ன.? அதன் தமிழ் அர்த்தம் என்ன.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement