Overdraft Meaning in Tamil
என்ன நண்பர்களே இன்று என்ன தகவலை தெரிந்துகொள்ள போகிறோம் என்று யோசிக்கிறீர்களா..? நீங்கள் அப்படியெல்லாம் யோசிக்கமாட்டீர்களே..! ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், இது என்ன பதிவு என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். இருந்தாலும் உங்களுக்கு மறுமுறையும் நினைவுபடுத்துகிறேன். ஓவர் டிராஃப்ட் (Overdraft) என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை, தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
ஓவர் டிராஃப்ட் என்றால் என்ன..?
பொதுவாக ஓவர்டிராப்ட் வசதி என்பது அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பலவற்றிலும் வழங்கப்படுகின்றது. நம் நாட்டில் எத்தனையோ வங்கிகள் இருக்கின்றன. அப்படி நம் நாட்டில் இருக்கும் வங்கிகள் அனைத்தும் நமக்கு உதவும் வகையில் நிதி பரிவர்த்தனையில் பல சேவைகளை வழங்கி வருகிறது.
அதுபோல ஓவர் டிராஃப்ட் என்பது உங்கள் வங்கிக் கணக்கு இருப்பு பூஜ்ஜியத்திற்கு கீழே குறைந்தால், உங்கள் பரிவர்த்தனைகளை உள்ளடக்கும் கடன் வரிசையாகும்.
RTE என்றால் என்ன.. வாங்க தெரிந்து கொள்வோம் |
அதாவது ஒரு பரிவர்த்தனை அல்லது திரும்பப் பெறுவதற்கு வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாதபோது Overdraft ஏற்படுகிறது. இருந்தாலும் Overdraft வங்கி பரிவர்த்தனையை செய்ய அனுமதிக்கிறது. அடிப்படையில், இது ஒரு கணக்கு பூஜ்ஜியத்தை அடையும் போது வழங்கப்படும் நிதி நிறுவனத்திலிருந்து கடன் நீட்டிப்பு ஆகும்.
வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் அல்லது திரும்பப் பெறுவதற்கான தொகையை ஈடுகட்ட போதுமான நிதி இல்லாத போதும், Overdraft கணக்கு வைத்திருப்பவரைத் தொடர்ந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
அதனால் Overdraft என்பது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கடன் வாங்க வங்கி அனுமதிக்கிறது. இதை தான் Overdraft என்று சொல்கிறார்கள்.
UAN என்றால் என்ன.. அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. |
VPN என்றால் என்ன தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |