பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்ற பழமொழியின் அர்த்தம் தெரியுமா?

Advertisement

பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்பதன் அர்த்தம் – Palamoli vilakkam 

வணக்கம் நபர்களே.. நம் முன்னோர்கள் நாம் செய்யும் பல விஷயங்களில் விழிப்புணர்வாக இருக்க, சிறந்து விளங்க, வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பலவகையான பழமொழிகளை சொல்லி வந்தனர். அவ்வாறு சொல்லப்படும் பலவகையான பழமொழிகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியாது. கூர்ந்து கவனித்து, நன்கு சிந்தித்தால் தான் அதற்கு அர்த்தம் என்ன என்று தெரியும். நிறைய கருத்துக்கள் நிறைந்த பழமொழியை நாம் கேட்கும் போது கொஞ்சம் புதிராகவும், கொஞ்சம் நகைச்சுவையாகவும் இருக்கும். சரி இந்த பதிவில் பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்ற பழமொழியின் சரியான விளக்கம் என்ன என்று இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

“பத்துக்கு மேல் பத்தினி இல்லை” அர்த்தம்… உங்களுக்கு தெரியுமா..?

இரவு பத்து மணிக்கு மேல் யாரும் பத்தினி இல்லை என்பது பொருள் அல்ல. நமது புராணத்தில் சொல்லப்படுகின்ற அருந்ததி, அநசூயை, அகலிகை, சீதை, சாவித்திரி, சந்திரமதி, தமயந்தி, நளாயினி, கண்ணகி, மண்டோதரி போன்ற பத்துப் பேரைத் தவிரப் பத்தினித் தெய்வங்கள் வேறு இல்லை என்பதே பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்பதாகும். இதுவே சரியான பொருளாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
தமிழ் பழமொழிகள் மற்றும் அதன் விளக்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement