Paralympics Meaning in Tamil | பாரா ஒலிம்பிக்
இந்த உலகில் பலவகையான மொழிகள் இருக்கின்றன அந்த அனைத்து மொழிகளும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது.. அனைவராலும் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளவும் முடியாது. வேண்டுமென்றால் குறைந்தது 5 அல்லது 10 பத்து மொழிகளை கற்றுக்கொள்வதே மிக பெரிய விஷயம் ஆகும். அப்படி பல மொழிகளை கற்றுக்கொண்டாலும் கூட அந்த மொழிகளில் இருக்கும் சில வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில் Paralympics என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆக இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் Paralympics என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம் சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து Paralympics என்பதன் வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலக ஒலிம்பிக் தின வாழ்த்துக்கள்
பாராலிம்பிக்ஸ் என்பதன் தமிழ் பொருள் | பாரா ஒலிம்பிக் என்றால் என்ன.?
- ஒலிம்பிக் தொடர்பாக ஊனமுற்றோருக்கான விளையாட்டு விழா. அதாவது இதனை இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்று அழைப்பார்கள்.
- தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் உடல் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு பல் விளையாட்டு போட்டிகள் ஆகும்.
- இதில் உடலியக்கக் குறைபாடுகள் உள்ளோர், உறுப்பு நீக்கப்பட்டோர், கண் பார்வை குறைவுள்ளோர், மற்றும் பெருமூளை வாதம் உள்ளோர் பங்கேற்கின்றனர்.
- இந்தப் போட்டிகள் குளிர்காலத்திலும் கோடைக்காலத்திலும் தொடர்புடைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.
- இந்தப் போட்டிகளை பன்னாட்டு இணை ஒலிம்பிக் குழு (IPC) கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
- இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்கம் 1948ஆம் ஆண்டு பிரித்தானிய இரண்டாம் உலகப் போர் முதுவர்களின் சிறு சந்திப்பில் நிகழ்ந்தது.
- படிப்படியாக முன்னேறி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாட்சப் என்பதன் தமிழ் பொருள்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |