பரிவு என்பதற்கான அர்த்தம் மற்றும் வேறு சொல்

Advertisement

பரிவு பொருள் | பரிவு meaning in tamil

பொதுவாக நாம் பயன்படுத்தும் நிறைய சொற்களுக்கு அர்த்தம் தெரியாமலே பேசுகிறோம். தொழில்நுட்பம் வளர்வது போல் நாமும் வளர வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் கலந்த வார்த்தைகளில் பேசுகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற சதேகம் வரும். ஏனென்றால் அந்த வார்த்தைகள் எல்லாம் நாம் பயன்படுத்துவதில்லை. அதனால் தான் பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டுவருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பரிவு என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

பரிவு என்றால் என்ன.? | பரிவு ராசி பலன் பொருள்:

பரிவு என்பது அடுத்தவரின் சோகத்தை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். மற்றவர்கள் ஏதேனும் துயரத்தில் இருந்தால் அவர்களின் கஷ்டத்தை அறிந்து நம்மால் இயன்ற நற்செயல்களை அவருக்கு செய்வது பரிவு ஆகும்.

பரிவு அர்த்தம் | பரிவு வேறு சொல்

பரிவு என்ற சொல்லுக்கு அனுதாபம், இரக்கம், கருணை, அன்பு, மரியாதை, யோசனை போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டு: 

மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்க்கையில் இன்பம், துன்பம், கவலை, மகிழ்ச்சி, இரக்கம் போன்றவை நிறைந்தவையாக தான் இருக்கும். இவற்றை எல்லாம் கடந்து தான் வர வேண்டும்.  நாம் இத்தகைய குணங்கள்  அனைத்தினையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துவது இல்லை. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு குணத்தினையும் நாம் வெளிப்படுத்துகின்றோம்.

ஒருவர் கஷ்டப்படுவதை நம் கண் முன்னே பார்க்கிறீர்கள் அல்லது கேட்கிறீர்கள். இதனால் அவர்களின் மேல் இரக்கம் ஏற்படும் இதனை பரிவு என்று கூறுகிறோம்.

மற்றவர் கஷ்டப்படுவதை பார்த்து அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்வதும், அல்லது இப்படி செய்யுங்கள் என்று ஆலோசனை வழங்குவதையும் பரிவு என கூறலாம்.

Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 

OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா 

Maiden என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement