POCS அர்த்தம்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் PCOS அர்த்தம் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும். அப்படி என்றால் பெண்களுக்கு தேவையில்லாத ஹார்மோன் சுரப்பிகள் சுரக்கும் பொழுது முகத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சினைப்பையில் கட்டிகளும் ஏற்படுகின்றன. இந்த PCOS விரிவாக்கத்தை நம் பதிவில் மூலம் தெளிவாக காணலாம் வாங்க.
இசிஜி மற்றும் எக்கோ டெஸ்ட் என்றால் என்ன |
Pcos Meaning in Tamil:
PCOS என்பது Polycystic Ovary Syndrome என்று சொல்லப்படுகிறது. Pcos என்பது பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி என்று அர்த்தம்.
PCOS ஆனது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் என்று சொல்லப்படும் ஆண்தன்மை சுரப்பி அதிகரிப்பதன் மூலம் கூட்டு நோயின் அறிகுறிகள் ஏற்படும்.
சினைப்பை நோய் என்றால் என்ன.?
சினைப்பை நோய்கள் என்பது மரபுவழி மற்றும் சூழல் என இரண்டும் இணைந்து காணப்படும் கூட்டுக்காரணிகள் என்று சொல்லப்படுகிறது. இந்த நோய் முன்பு யாருக்கும் இருந்தால் சிலருக்கு தலைமுறை தலைமுறையாக வந்துவிடும்.
சினைப்பை நோய்கள் 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட பெண்களுக்கு ஏற்படும் அகச்சுரப்பி தொகுதி குறைபாடுகள் என்றும் சொல்லப்படுகிறது.
சினைப்பையில் ஆண்ட்ராஜன் அளவு அதிகரிப்பதால் சினைப்பையில் கட்டிகள் மற்றும் சினைப்பை முட்டைகள் வளர்ச்சி குறைபாடு போன்ற காரணங்களால் சினைப்பை நோய்கள் காணப்படுகின்றன.
சினைப்பை நோய்களின் அறிகுறிகள்:
PCOS -யின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நோயின் அறிகுறிகள் ஆனது, ஆண் தன்மை அதிகரிப்பதால் முகம், மார்பு, முகவாய், மற்றும் உடலில் தேவையில்லாத இடங்களில் முடி வளரும்.
உடல் வலி மற்றும் இடுப்பெலும்பு வலி ஏற்படும்.
மலட்டு தன்மை பிரச்சனையான சினை முட்டைகள் பற்றாக்குறை.
மாதவிடாய் பிரச்சனைகள் ஒழுங்கற்ற முறையில் வருவது.
உடல் பருமன் அதிகரித்தல்.
தோல் பகுதிகள் அழுத்தமாக காணப்படுதல்.
மூச்சி விடுதலில் சிரமங்கள் மற்றும் சீரற்ற மனநிலை.
மாதவிடாயின் போது அதிகமான இரத்த போக்கு.
முகத்தில் அதிகமான முகப்பருக்கள் பிரச்சனைகள்.
நீரழிவு நோய் மற்றும் கருப்பையில் புற்றுநோய் போன்றவை இந்த சினைப்பை நோய்களின் அறிகுறிகள் ஆகும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |