பிளாஸ்மா என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

Plasma Meaning in Tamil

பொதுவாக நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. அதில் நமது தாய்மொழியான தமிழில் நாம் பேசும் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். அதிலும் நமக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டால் மருத்துவர் கூறும் அர்த்தங்கள் நமக்கு அவ்வளவாக தெரிந்திருக்காது. என்ன தான் சொல்கிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதை விட அந்த வார்த்தைகளை நம்மால் உச்சரிக்க முடியாது. அதனால் தான் நமது பதிவில் பல்வேறு வார்த்தைக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பிளாஸ்மா என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பிளாஸ்மா என்றால் என்ன.?

பிளாஸ்மா என்றால் என்ன.

பிளாஸ்மா என்பது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் உடலின் செயல்பாட்டிற்கு முக்கியமாக இருக்கிறது. இந்த திரவம் உடல் முழுவதும் இரத்தக் கூறுகளைக் கொண்டு செல்கிறது.

பிளாஸ்மா உங்கள் இரத்தத்தின் மிகப்பெரிய பகுதியாகும். இது அதன் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தில் பாதிக்கும் மேல் (சுமார் 55%) ஆகும். இரத்தத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டால், பிளாஸ்மா ஒரு வெளிர் மஞ்சள் நிற திரவமாக காணப்படுகிறது. பிளாஸ்மா நீர், உப்புகள் மற்றும் நொதிகளைக் கொண்டுள்ளது.

பிளாஸ்மாவின் முக்கிய பங்கு ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்களை உடலின் தேவையான பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதாகும். செல்கள் அவற்றின் கழிவுப் பொருட்களையும் பிளாஸ்மாவில் வைக்கின்றன. உடலில் இருந்து இந்த கழிவுகளை அகற்ற பிளாஸ்மா உதவுகிறது. இரத்த பிளாஸ்மா உங்கள் இரத்த ஓட்ட அமைப்பு மூலம் இரத்தத்தின் அனைத்து பகுதிகளையும் கொண்டு செல்கிறது.

பிளாஸ்மா என்பதற்கான அர்த்தம்: 

குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம்

இரத்த அணுக்களைக் கொண்டு செல்லும் நிறமற்ற திரவம்

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா 

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement