பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
நம் முன்னோர்கள் ஏதவாது திட்டினார்கள் என்றால் ஒரு பழமொழியை சொல்லி தான் திட்டுவார்கள். அவர்கள் சொல்லும் பழமொழிக்கு ஒரு அர்த்தமாக இருக்கும், ஆனால் அவர்கள் வேறொரு அர்த்தம் புரிந்து கொண்டு சொல்வார்கள். அது போல தான் ஏதவாது சுப நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்றால் அது புதன் கிழமை வருகிறது என்று வைத்து கொள்வோம், அந்த நாளில் செய்ய வேண்டாம் வேறொரு நாளில் செய்து கொள்வோம் என்று சொல்வார்கள். அதற்கு வீட்டில் யாரும் பெரியவர்கள் இருந்தால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதனால் இந்த பதிவில் பழமொழிக்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வதற்கான அர்த்தம்:
போன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
களவும் கற்று மற என்ற பழமொழிக்கான உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?
இதில் பொன் என்பது வானத்தில் இருக்க கூடிய வியாழன் கோளை குறிக்கிறது. புதன் என்பது புதன் கோளானது குறிக்கிறது. புதன் கோளானது சூரியனுக்கு பக்கத்தில் இருக்கிறது. இந்த கோளானது ஒரு ஆண்டுக்கு சூரியனை நான்கு முறை சுற்றி வருகிறது.
ஆனால் இந்த வியாழன் கோளானது 12 வருடத்திற்கு ஒரு முறை தான் சுற்றி வரும். நாம் பூமியிலிருந்து வியாழன் கோளை பார்த்து விடலாம். ஆனால் இந்த புதன் கோளை பார்க்க முடியாது . ஏனென்றால் சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியினால் நம்மால் பார்க்க முடியாது. அதனால் தான் வியாழன் என்பதை பொன் என்று சுட்டிக்காட்டி பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறியுள்ளார்கள்.
Dongle என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |