Pookie Meaning In Tamil | Pookie தமிழ் அர்த்தம்
இன்றைய பதிவில் Pookie சொல்லுக்கான தமிழ் அர்த்தம் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இன்றைய சமூக ஊடகங்களில் நிறைய வார்த்தைகள் ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சமீப காலங்களில் Pookie என்கிற வார்த்தை மிகவும் trend ஆகி வருகின்றன. நம்மில் பலருக்கு Pookie சொல்லுக்கான அர்த்தம் தெரிந்திருக்காது. Pookie சொல்லை பயன்படுத்துபவர்களும் அதற்கான சரியான அர்த்தம் இது தான் என்று தெரியாமலே பயன்படுத்துகிறார்கள்.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு நிறைய வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன அவற்றை தெரிந்துகொண்டு சரியாக பயன்படுத்தினால் நல்லது. அர்த்தம் தெரியாதவர்களுக்கும் நீங்கள் கற்று கொடுங்கள். இப்பொழுது Pookie சொல்லுக்கான அர்த்தத்தை பார்க்கலாம் வாருங்கள்.
Pookie என்றால் என்ன?
இந்த வார்த்தை 1900 களில் ஜெர்மனியில் குழந்தைகளுக்கான அன்பான வார்த்தையாக உருவானது. இது 1960களில் பிரபலமானது மற்றும் கார்பீல்ட் தொடரில் இடம்பெற்றது. 2000 களின் நடுப்பகுதியில், இது அன்பின் வார்த்தையாக மிகவும் பொதுவானதாக மாறியது
Pookie என்ற வார்த்தை வித்தியாசமான வார்த்தையாக தான் தெரிகிறது. ஆனால் Pookie என்ற சொல்லை அன்பானவர்களுக்காக பயன்படுத்தும் அன்பான வார்த்தையாகும். Pookie என்பது ஒரு புனைப்பெயர் ஆகும். Pookie என்ற அன்பான பெயர் நிறைய அன்பையும் அன்பான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது.
உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த உங்கள் முக்கியமான மற்றவர், நண்பர் அல்லது செல்லப் பிராணி போன்ற ஒருவரை Pookie என்று அழைக்கலாம். Babe, Cutie Pie போன்ற புனைப்பெயர்கள் போல Pookie – யும் ஒரு வகை புனைப்பெயர் ஆகும். உங்கள் அன்பிற்குரியவர்களிடம் நீங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
Pookie என்பது அன்பிற்குரியவர்களிடம் பயன்படுத்தப்படும் புனைப்பெயர் ஆகும்.
Pookie பெயர்ச்சொற்கள்:
- Pookie – பூக்கி
- Pookie – Bear – பூக்கி பியர்
- Pookie – Wookie – பூக்கி-வூக்கி
எடுத்துக்காட்டு:
- இங்கே வா, பூக்கி, நாம் விரும்பும் படத்தைப் பார்ப்போம்.
- என் நண்பன் என்னை பூக்கி என்று அழைப்பான்.
- எனது செல்லப்பிராணியின் பெயர் பூக்கி.
- என் பூக்கி காணாமல் போய்விட்டது.
- எனது தோழி என்னை செல்லமாக பூக்கி என்று அழைப்பாள்.
Samathuva Pongal Meaning In Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |