Portfolio Meaning
நம்மில் பெரும்பாலனவருக்கு தினமும் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கே சரியான அர்த்தம் தெரிவதில்லை. அதுவும் நாம் தாய் மொழியில் பல வார்த்தைக்கு அர்த்தம் நமக்கு தெரிவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அப்படி இருக்கும் போது ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு தமிழில் பல அர்த்தங்கள் உண்டு. நாம் அந்த சொல்லை பயன்படுத்தும் இடத்தை பொருத்து அதன் அர்த்தம் மாறும். அப்படி உள்ள வார்த்தைகளின் அர்த்தங்கள் நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்புகள் மிக குறைவு.
இந்த மாதிரியான நமக்கு தேவைப்படும் அர்த்தங்கள், நாம் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள நமக்கு dictionary சில நேரங்களில் கைகொடுப்பது இல்லை, நாம் இப்போது எல்லாம் ஆன்லைனில் தேட ஆரம்பித்து விட்டோம். அப்படி ஆன்லைனில் அர்த்தம் தேடுபவர்களுக்காக வந்துள்ளதது தான் பொதுநலம்.காம் இதில் உங்களுக்கு தேவையான அர்த்தங்களை பெற்று பயன் பெறுங்கள். இன்று நாம் பார்க்க போகும் வார்த்தை portfolio, இந்த பதிவை முழுமையாக படித்து உங்களுக்கு தேவையான விளக்கத்தை பெறுங்கள்.
Portfolio Meaning in Tamil:
portfolio என்னும் ஆங்கில வார்த்தைக்கு தொகுப்பு என்பது அர்த்தமாகும். ஆனால் ஒவ்வொரு துறையிலும் அதற்கு பல விதமான பொருள்கள் உள்ளன. அதாவது நிதிமேலாண்மையில், தனிநபர் பயன்பாட்டில் என ஒவ்வொரு பிரிவுகளிலும் வேறுவிதமான அர்த்தங்கள் உள்ளன.
அவற்றை தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
நிதி மேலாண்மையில், Portfolio என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் வைத்திருக்கும் முதலீடுகளின் தொகுப்பாகும்.
அதாவது தனிநபர் தனது முதலீடுகளை ஒரே திட்டத்தில் பயன்படுத்தாமல் வெவ்வேறு திட்டங்களில் பயன்படுத்துவது. எடுத்துக்காட்டாக.
ஒருவர் அவரின் முதலீட்டை FD, தங்க பத்திரங்கள், ரியல் எஸ்டேட், Share Market, அல்லது வேற திட்டங்களில் தனது முதலீட்டை பிரித்து பயன்படுத்துவதை Portfolio எனப்படும்.
கல்வியில், Portfolio என்பது ஒரு குறிப்பிட்ட மாணவரின் திறன்கள், தகுதிகள், பயிற்சி மற்றும் அனுபவங்கள் அடங்கிய தொகுப்பு ஆகும்.
தளர்வான காகிதங்கள், வரைபடங்கள் அல்லது வரைபடங்களை எடுத்துச் செல்வதற்கான பிளாட், போர்ட்டபிள் கேஸ் Portfolio எனப்படும். “Portfolio” லத்தீன் வார்த்தையான portafoglio என்பதிலிருந்து வந்தது, அதாவது “தளர்வான காகிதங்களை எடுத்துச் செல்வதற்கு பயன்படுவது”.
கலைகளில், Portfolio என்பது ஒரு கலைஞரின் படைப்புகளின் தொகுப்பாகும். அதாவது ஒரு ஓவியரின் அனைத்து விதமான ஓவியங்களின் அடங்கிய தொகுப்பை Portfolio ஆகும்.
wisely என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |