பிரயாணம் என்றால் என்ன.? அதன் தமிழ் அர்த்தம் என்ன.?

Advertisement

Prayanam Meaning in Tamil | பிரயாணம் அர்த்தம் | பிரயாணம் ராசிபலன்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிரயாணம் என்றால் என்ன.? என்பதை கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே பிரயாணம் என்ற வார்த்தையை அதிகமான இடங்களில் பிறர் கூற கேட்டு இருப்போம். ஆனால், பிரயாணம் என்பதற்கான பொருள் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக ராசிபலனில் பிரயாணம் என்று குறிப்பிட்டு இருக்கும். அதனால் , நாம் அனைவருமே பிரயாணம் என்றால் என்ன பொருள்/அர்த்தம் என்பதை தெரிந்துகொள்ள விரும்புவோம்.

அப்படி நீங்கள் பிரயாணம் என்பதன் தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிரயாணம் பற்றிய விவரங்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பிரயாணம் என்றால் என்ன.?

 பிரயாணம் என்ற சொல் ஆனது, ஒரு வடமொழி சொல் ஆகும். பிரயாணம் என்பதன் தமிழ் அர்த்தம்/சொல் பயணம் என்பது ஆகும். பயணம் என்பதே சரியான தமிழ் சொல்.  அக்காலத்தில் உள்ளவர்கள் அனைவரும் வெளியில் செல்வதை பிரயாணம் மேற்கொள்ளுங்கள் என்று தான் கூறுவார்கள். குறிப்பாக நடைப் பிரயாணம் என்று கூறுவார்கள். நடைபிரயாணம் என்பது, நீண்ட தூரம் கால் நடையாக நடந்து செல்வது ஆகும். பிரயாணம் என்ற சொல் ஆனது, பயணம், சுற்றுலா, அல்லது யாத்திரை என்பதை குறிக்கிறது.

 பிரயாணம், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் செயலை/நிகழ்வை குறிக்கிறது. 

அதேபோல், புலவர்கள் ஆன்மீகவாதிகள் அனைவரும் பயணம் என்று சொல்லமாட்டார்கள். பிரயாணம் என்றே கூறுவார்கள்.  அதுமட்டுமில்லாமல், பிரயாணம் என்பதற்கு மரணம் அல்லது இறப்பு என்ற பொருளும் உண்டு. பிரயாண காலம் என்று கூறி கேட்டு இருப்போம். பிரயாண காலம் என்றால் இறப்பு நேரம் என்றும் கூறப்படுகிறது .

பிரயாணம் அர்த்தம்

ராசி பலனில் உள்ள கீர்த்தி என்பதன் அர்த்தம்..!

Prayanam Meaning in Tamil Rasi Palan:

ராசிபலனில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரயாணம் என்ற சொல்லுக்கு பயணம் என்பது அர்த்தம் ஆகும். உங்களுக்கு அந்நாளில் பயணம் இருக்கும் என்பதை குறிக்கிறது.

பிரயாணம் Meaning in English:

பிரயாணம் என்பதை ஆங்கிலத்தில் Travel, Journey என்று கூறுவார்கள்.

பிரயாணம் எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • நான் இந்த வாரம் குடும்பத்துடன் ஒரு பிரயாணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
  • பிரயாணம் செல்ல இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும்.
  • பிரயாணம் மேற்கொள்ளும்போது கவனமாக இருங்கள்.
  • நாம் இன்னும் வெகுதூரம் பிரயாணம் செய்ய வேண்டும்.

பயணம் பற்றிய கவிதைகள்..!

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement