Precipitation என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா..?

Advertisement

Precipitation Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Precipitation என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

 

Precipitation என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

precipitation என்பது மழைப்பொழிவை குறிக்கிறது. அதாவது வளிமண்டலத்திலிருந்து பூமியின் மேற்பரப்பில் விழும் நீரின் அமைப்பை precipitation என்று அழைக்கப்படுகிறது.

நீரின் அமைப்பு என்பது மழை, பனி, ஆலங்கட்டி மழை, மற்றும் பனி மழை ஆகியவை இதில் அடங்கும்.

precipitation நீர் சுழற்சியின் ஒரு முக்கிய பகுதியாகும்.

பல்வேறு வகையான மழைப்பொழிவு வெவ்வேறு வளிமண்டல நிலைகளால் ஏற்படுகிறது.

வளிமண்டலத்தில் நீராவி உறைவதால் பனி ஏற்படுகிறது. இந்த பனிக்கட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரிதாக வளரும் போது ஆலங்கட்டி மழை உருவாகிறது. பனிப்பொழிவு என்பது மழை மற்றும் பனியின் கலவையாகும்.

precipitation மில்லிமீட்டர் அல்லது அங்குலங்களில் அளவிடப்படுகிறது. ஒரு மில்லிமீட்டர் மழைப்பொழிவு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு சமம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் விழும் மழைப்பொழிவின் அளவு, இடம், ஆண்டின் நேரம் மற்றும் வானிலை உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து மாறுகிறது.

Simp என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement