Probationary Officer Meaning in Tamil
நாம் அனைவரும் படித்து முடித்த உடன் முதலில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். அப்படி பார்த்தால் சிலர் தனியார் துறையில் உள்ள வேலைக்கும், மற்ற சிலர் கவுர்மெண்ட் வேலைக்கும் செல்வார்கள். அந்த வகையில் நாம் ஒவ்வொருவரிடமுமே படித்த முடித்த விட்டு வேலைக்கு சென்ற பிறகு நிறைய மாற்றங்கள் காணப்படும். அதில் முதல் மாற்றமாக நமது பேச்சு முறை ஆனது வேறுபட்டு காணப்படும். மேலும் தமிழில் பேசுவதை விட நாம் அதிகமாக ஆங்கிலம் கலந்த பேச்சினை தான் பேசுவோம். அதேபோல் நாம் என்ன துறையில் வேலை பார்க்கின்றோம் என்பதை கூட ஆங்கிலத்தில் தான் கூறுவோம். அப்படி பார்த்தால் வேலை செய்யும் ஒவ்வொரு பணியினையும் நாம் ஆங்கிலத்தில் சொல்லலாம். அதுவே அதற்கான தமிழ் அர்த்தம் என்னவென்று கேட்டால் நமக்கு தெரிவது இல்லை. ஆகையால் இன்று Probationary Officer என்ற சொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
ப்ரோபேஷனரி ஆபீசர் தமிழ் அர்த்தம்:
ப்ரோபேஷனரி ஆபீசர் என்பது நமக்கு தெரிந்த ஒரு துறையான வங்கி துறையினை சேர்ந்த ஒரு பதவி ஆகும். ப்ரோபேஷனரி ஆபீசர் என்பதற்கு தகுதிகாண் நிலை அலுவலர் என்பது பொருளாகும்.
அந்த வகையில் ப்ரோபேஷனரி ஆபீசர் என்ற பணியில் உள்ளவர்கள் வங்கியில் உள்ள ஒட்டு மொத்தமான நிர்வாகத்தையும் பார்ப்பதற்கான பணி ஆகும்.
அதாவது வங்கியில் உள்ள பணபரிவர்த்தனை, பணம் வழங்குதல் மற்றும் பெறுதல், வாடிக்கையாளர்களை கண்காணித்தல், காசோலைகளை அனுப்புதல், வரைவோலை வழங்குதல் என இத்தகைய செயல்பாடுகள் அனைத்தினையும் கண்காணித்து சரியான முறையில் செயல்பட செய்வது ஆகும்.
மேலும் வங்கியில் எந்த ஒரு நன்மை மற்றும் தீமை என எது நடந்தாலும் அதற்கான முழு பொறுப்பாகவும் திகழ்பவர் இத்தகைய அதிகாரியே ஆவர்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |