Prostate Meaning in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது புரோஸ்டேட் என்றால் என்ன? என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து புரோஸ்டேட் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
புரோஸ்டேட் என்றால் என்ன?
புரோஸ்டேட் என்பது ஒரு மனித உடலில் உள்ள ஒரு சுரப்பி ஆகும். இந்த புரோஸ்டேட் சுரப்பிகள் ஆண்களுக்கு மட்டுமே உள்ளது. குறிப்பாக ஆண் இனபெருக்க அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு சிறிய சுரப்பி.
இது ஒரு வால்நட் அமைப்பில் இருக்கும். பிறப்பைக் கொண்டு வரும் உறுப்புகளோடு அதுவும் உதவுகிறது.
சிறுநீர்ப் பைக்கு சற்று கீழே இந்த புரோஸ்டேட் சுரப்பி இருக்கிறது. உங்கள் மலக்குடலுக்கு முன்னால் உள்ளது. இது யூரேத்ராவின் ஆரம்ப நிலையைச் சுற்றி இருக்கிறது. வேறு விதமாகச் சொன்னால் யூரேத்ராவின் ஆரம்ப பகுதியே புரோஸ்டேட் சுரப்பி மூலமாகத் தான் செல்கிறது.
இது ஆண்களுக்கு இருக்கும் குழந்தை பிறப்புக்குக் உதவும் அங்கம். இது ஒரு திரவத்தை சுரக்கிறது. அது திரவத்தோடு ஆண் விந்துக்கள் ஏற்கப்பட்டு யூரேத்ராவுக்குள் உடலுறவின் பொழுது பீச்சப்படுகிறது.
இந்த சுரப்பி வளரக்கூடியது. அதாவது பொதுவாக ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, புரோஸ்டேட் சுரப்பியின் அளவு இயல்பாகவே சிறிதளவு அதிகரிக்கும். ஆனால், 25 கிராம் எடை அளவுக்குள் இருப்பது நல்லது.
புரோஸ்டேட் சுரப்பி வெளிப்புறத்தில் பெரிதானால், பயப்படத் தேவை இல்லை. ஆனால், சுரப்பியின் உட்புறமாகத் தடித்து பெரிதானால், அதன் தசைகள் சிறுநீர் செல்லும் குழாயை நெருக்கும். இதனால், சிறுநீர் வெளியேறுவதில் கடினமான சூழல் ஏற்படும்.
புரோஸ்டேட் பெரிதாக இரண்டு காரணங்கள் உள்ளன. புற்றுநோய் காரணமாக பெரிதாவது ஒரு வகை. பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா (Benign Prostatic hyperplasia) எனும் பிரச்சனை மற்றொரு வகை.
60 வயதைக் கடந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா பிரச்சனை இருக்கிறது. ஆண்களுக்கு வயதானவுடன் புரோஸ்டேட் ஏன் பெரிதாகிறது என்பதற்கு முழுமையான மருத்துவ விளக்கம் கிடையாது.
எனினும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் – ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் விகிதம் மாறும்போது, புரோஸ்டேட் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இசிஜி மற்றும் எக்கோ டெஸ்ட் என்றால் என்ன?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |