புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

Advertisement

Pun Patta Nenjai Pugai Vittu Aarattu

பொதுவாக நாம் பேசும் வார்த்தைகளுக்கு நிறைய அர்த்தம் இருக்கும். அதாவது ஒரு வார்த்தையில் ஒரு மாதிரி இழுத்து சொன்னால் அதற்கான அர்த்தம் மாறிவிடும். அதனால் அந்த அளவிற்கு தமிழ் மிகவும் செம்மையான மொழியாகும். இது தான் மிகவும் பழமையான மொழி ஆகும்.

அதேபோல் வீட்டில் உள்ள பெரியவர்கள் நம்மை ஏதாவது பேசிவிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றும் பின்னால் நமக்கு நகைச்சுவையாக இருக்கிறது என்று அனைவரும் யோசிப்போம் அல்லவா..? ஆனால் இதற்கு பின்னால் நிறைய அர்த்தம் இருக்கிறது. உதாரணமாக கப்பலே கவுந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே என்று சொல்வார்கள். இதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா அல்லது அதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..? அதேபோல் புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்று என்பார்கள். இதற்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

புண்பட்ட மனதை புகை விட்டு – Pun Patta Nenjai Pugai Vittu Aarattu:

புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று என்பதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வதற்கு முன் கீழ் இருக்கும் சில பழமொழிகளுக்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்..!

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன

கழுதை கெட்ட குட்டி சுவர் என்று திட்டுவதற்கான அர்த்தம் என்ன

சரி வாங்க இப்போது புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்..!

புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று என்பது ஒரு துன்பம் நடக்கிறது என்றால் அதன் பின்பும் அதனை பற்றி நினைத்துக்கொண்டு இருக்காமல், வேறு ஏதாவது விஷயத்தில் மனதை புகவிட்டு ஆற்றவும் என்பது அர்த்தம் ஆகும்.

இதில் நாம் சரியாக கவனிக்க வேண்டியது புக விட்டு என்பதை புகை விட்டு என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது தான் உண்மையான அர்த்தம் ஆகும்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement