புவிசார் குறியீடு என்றால் என்ன.?

Advertisement

புவிசார் குறியீடு என்றால் என்ன.?

நாம் ஒவ்வொருவருக்கும் எல்லாவற்றையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறையவே உள்ளது. சில நபர்களிடம் நமக்கு தெரியாததை பற்றி கேட்டால் அதற்கான விடையை சொல்வார்கள். எப்படி டா எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வச்சுருக்காங்க என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும். கடவுள் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிவை கொடுப்பதில்லை. அதற்காக நம் அப்படியே இருந்து விட கூடாது. நமது மூளையை வளர்ப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் புவிசார் குறியீடு என்பதற்கான அர்த்தம் மற்றும் அவை என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

புவிசார் குறியீடு என்பதற்கான அர்த்தம்:

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தயாரிப்புகள் இருக்கும். அந்த தயாரிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலும், பெருமைப்படுத்தும் வகையிலும் கொடுக்கப்படுவது புவிசார் குறியீடு ஆகும்.

புவிசார் குறியீடு எப்போது வந்தது:

ஒரு ஊரில் அல்லது ஓரிடத்தில் விளையக்கூடிய பொருட்களின் தரம் மற்றும் காலநிலை, நிலம், நீர் போன்றவற்றைன் தன்மையை வைத்து புவிசார் குறியீடு கொடுக்கப்படுகிறது. இதனை அடுத்தா தலைமுறைக்கும் தெரியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது தான் புவிசார் குறியீடு பாதுகாப்புச் சட்டம் 1999 ஆம் ஆண்டு அரசு அமல்படுத்தியது.இதனை 2003 ஆண்டில் தான் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.

இச்சட்டத்தின் படி ஒவ்வொரு ஊரில் உள்ள சிறப்பான விஷத்திற்கு புவிசார் குறியீடு வாங்கி கொள்ளலாம். தமிழ்நாட்டில் மட்டும் 32 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா

புவிசார் குறியீடு வாங்குவதால் என்ன நன்மைகள்:

ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு உள்ளது என்றால் அந்தஊர் மக்களை தவிர வேறு எந்த ஊர் மக்களும் அந்த பெயரினை பயன்படுத்தி தயாரிக்க முடியாது.

எடுத்துக்காட்டாக திருநெல்வேலி அல்வா இதனி அந்த ஊர் மக்களால் மட்டும் தான் தயாரித்து விற்க முடியும். மேலும்  இதன் மூலம் போலியாக தயாரிக்க முடியாது.

தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்:

  1. காஞ்சிபுரம் பட்டுச் சேலை
  2. மதுரை சுங்குடி சேலை
  3. ஆரணிப்பட்டு
  4. கோவை கோரா பட்டு
  5. சேலம் வெண்பட்டு
  6. திருபுவனம் பட்டு
  7. பவாணியமக்காலம் பத்தமடைப் பாய்
  8. தோடர்களின் வேலை பட்டுத் துணிகள்
  9. மதுரை மல்லி
  10. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
  11. தஞ்சாவூர் ஓவியங்கள்
  12. தஞ்சாவூர் கலைத்தட்டு
  13. கொடைக்கானல் மலை பூண்டு
  14. பவானி ஜமக்காளம்
  15. விருப்பாச்சி மலை வாழை
  16. செட்டிநாடு அரண்மனை
  17. நாகர்கோவில் குத்துவிளக்கு
  18. சுவாமி மலை வெண்கலச்சிலை
  19. கோவை வெட் கிரைண்டர்
  20. கோவை தொல்பொருட்கள்
  21. நீலகிரி தேயிலை
  22. பழனி பஞ்சாமிர்தம்
  23. சேலம் மாம்பழம்
  24. தூத்துக்குடி மக்ரூன்
  25. திருநெல்வேலி அல்வா
  26. திண்டுக்கல் பூட்டு
  27. காரைக்குடி கண்டாங்கி சேலை
  28. ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா

Embolism என்றால் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement