வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருமண பத்திரிகையில் இருக்கும் RSVP என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.?

Updated On: October 16, 2024 4:37 PM
Follow Us:
RSVP Meaning in Tamil Wedding
---Advertisement---
Advertisement

RSVP Meaning in Tamil Wedding | RSVP Full Form

நாம் அனைவருமே, பெரும்பாலான கல்யாண அழைப்பிதழ்களில் RSVP என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்து இருப்போம். அனால், அதனை அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, RSVP என்பதன் தமிழ் அர்த்தத்தை இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

திருமண பத்திரிக்கையில் RSVP என சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும். நம்மில் சிலபேர் RSVP என்றால் என்ன.? ஏன் இந்த வார்தையை பெரும்பாலான பத்திரிக்கையில் குறிப்பிடுகிறார்கள் என யோசித்து இருப்போம். அப்படி யோசித்து இருக்கும் அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, திருமண பத்திரிகையில் இருக்கும் RSVP என்பதன் அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

RSVP Meaning in Invitation Card | What is RSVP in Invitation:

RSVP என்பதன் விரிவாக்கம் “Répondez s’il vous plaît” என்பதாகும். இது ஒரு பிரெஞ்சு சொற்றொடர் ஆகும். இதற்க்கு ஆங்கிலத்தில் “Please Reply” என்று பொருள். RSVP என்பதற்கு தமிழில் ‘தயவு செய்து பதிலளிக்கவும்’ என்பது பொருளாகும். 

RSVP Meaning in Invitation Card

மாங்கல்யம் தந்துனானே மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா.?

Why RSVP is Important in Formal Invitation Letter:

அதாவது, நாம் கல்யாணத்திற்கு அழைக்கும் நபர், கல்யாணத்திற்கு கட்டாயம் வருவாரா.? இல்லையா? என்பதைத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, கண்ணியமான கோரிக்கை வார்த்தையாக இது உள்ளது. அதனால் தான், பெரும்பாலான பத்திரிக்கையில் RSVP என்ற வார்த்தை இடப்பெற்றிருக்கும்.

இந்த வார்த்தை குறிப்பாக  விழாவை நிகழ்த்தும் நபரால் பயன்படுத்தப்படுகிறது. அப்போதுதான், அவர் விழாவிற்கு வருகைதரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை பொறுத்து விழாவிற்கான வேலையை செய்ய முடியும்.

இக்காலத்தில், ஒரு திருமணத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. கலயாணத்திற்கான மண்டபம், முறையான போக்குவரத்து வசதி, விருந்து செலவு என பெரிய வேலைகள் இருக்கும். இதற்கு அதிகமாக செலவாகும். பொதுவாக, கல்யாணம் போன்ற விழாக்களில் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை கணித்து அவர்களுக்கு ஏற்ப விருந்துகளை ஏற்பாடு செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். ஒரு சில நேரங்களில் விருந்தினர்கள்  குறைவாவோ அல்லது அதிகமாகவோ தான் வருவார்கள். இதனால், பல்வேறு சிக்கல்கள் கடைசி நிமிடத்தில் குழப்பம் மற்றும் பற்றாக்குறை எற்படும். இதனை தவிர்க்கவே, கல்யாண அழைப்பிதழ்களில் RSVP என்று குறிப்பிடப்படுகிறது.

RSVP என்று பத்திரிக்கையில் போடப்பட்டிருந்தால் விழாவிற்கு வருகிறேன் அல்லது வரவில்லை என்ற பதிலை அவர்களுக்கு கூறிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விழாவினை நடத்துபவர்கள் வருகை தரும் உறவினர்களின் எண்ணிக்கையை பொறுத்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

எனவே, இனிமேல் நீங்கள் ஏதேனும் அழைப்பிதழ்களில் RSVP போடப்பட்டிருப்பதை அறிந்தால் அவர்களுக்கு வருகிறோம் அல்லது வரவில்லை என்ற பதிலை அளிக்க வேண்டும். RSVP என்பதன் அர்த்தமே “தயவு செய்து பதில் அளியுங்கள்” என்பதே ஆகும்.

Akaay (அகாய்) என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now