RTE என்றால் என்ன..? வாங்க தெரிந்து கொள்வோம்..! | RTE Meaning in Tamil

Advertisement

RTE Meaning in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் அனைவரும் இந்த பதிவில் மூலம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. அதனால் இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். அதை நாம் தெரிந்து கொள்ளலாம். சரி RTE என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே அதை பற்றி விரிவாக காணலாம்.

RTE என்றால் என்ன..? 

right to education

பொதுவாக பெற்றோர்கள் அனைவருக்கும் தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இது அனைத்து பெற்றோர்களின் கனவாகவே இருக்கிறது. ஆனால் படிப்பில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது.

அதாவது அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி என்று 2 பிரிவுகள் இருக்கிறது. அதனால் ஏழை குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளால் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

UAN என்றால் என்ன.. அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. 

அதனால் இதை தடுக்கும் விதமாக அரசு கொண்டு வந்த சட்டம் தான் RTE. அதாவது RTE என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும். இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் அல்லது கல்விக்கான உரிமைச் சட்டம்  தான் RTE என்று சொல்லப்படுகிறது. 

இந்த சட்டமானது 4 ஆகஸ்ட் 2009 அன்று இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும். அதுபோல Right To Education என்பது RTE முழு விரிவாக்கமாகும்.

VPN என்றால் என்ன தெரியுமா

இந்த குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இந்தச் சட்டமானது 6 முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்குகிறது. மற்றும் தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்ச விதிமுறைகளைக் குறிப்பிடுகிறது. அனைத்து தனியார் பள்ளிகளும் குழந்தைகளுக்கு 25% இடங்களை ஒதுக்க வேண்டும் என்று RTE சட்டம் சொல்கிறது.

AI தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார்

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement