Samathuva Pongal Meaning In Tamil
ஜனவரி மாதம் ஆரம்பித்தாலே பொங்கல் பண்டிகைக்கான வேலைகள் ஆரம்பித்து விடும். நம் வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து பொங்கல் பண்டிகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வோம். அதே போல் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் நடைபெறும். மாணவர்கள் பொங்கல் பண்டிகைக்கு ஆரவாரத்துடன் தயாராகுவார்கள். பெண்கள் புடவைகளிலும் ஆண்கள் வேஷ்டிகளிலும் ஆடை அணிந்து வந்து பொங்கலை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
பொங்கல் விழா என்ற அறிவிப்பு வந்தாலே மாணவர்கள் மகிழ்ச்சியாக பொங்கல் விழாக்கான ஏற்பாடுகளை செய்வார்கள். மேலும் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். இந்த பொங்கல் விளையாட்டு என்பது எல்லா ஊர்களிலும் கூட நடைபெறும்.
பொங்கல் பண்டிகை என்பது பாரம்பரிய பண்டிகை என்பதால் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவாக இருக்கிறது. சமத்துவ பொங்கல் என்றால் என்ன இதற்கான அர்த்தத்தை இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
சமத்துவ பொங்கல் என்றால் என்ன?
தமிழ் சமுதாயத்தில் கொண்டாடும் பொங்கல் பண்டிகை ஜாதி, மத இனவேறுபாடுகள் எதுவுமின்றி அனைவரும் இணைந்து கொண்டாடும் பொங்கல் பண்டிகை தான் சமத்துவ பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. தை முதல் நாள் பொங்கல் அன்று வீட்டில் அனைத்து உறவினர்களும் இணைந்து பொங்கல் வைப்பார்கள்.
ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பொங்கலுக்கு முதல் வாரமே அனைத்து மாணவர்களும் இணைந்து ஜாதி, மத வேறுபாடின்றி பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுவார்கள். மாணவர்கள் அனைவரும் வண்ண உடைகளில் வந்து பொங்கலை கொண்டாடுவார்கள். பொங்கல் அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் போட்டிகளும் நடைபெரும். அனைத்து மாணவர்களும் உங்கள் வைத்து போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுவார்கள்.
சமத்துவ பொங்கல் அர்த்தம்:
சமத்துவ பொங்கல் என்பது அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து ஜாதி, மத வேறுபாடின்றி பொங்கல் வைத்து பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதுதான் சமத்துவ பொங்கல் என்று சொல்கிறாரகள்.
ஜாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை சமத்துவ பொங்கல் பண்டிகையாகும்.
எனவே, நாமும் நம் வீட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இந்த சமத்துவ பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |