வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சதிஷ் என்ற பெயருக்கான அர்த்தம் தெரியுமா.?

Updated On: January 10, 2025 1:47 PM
Follow Us:
sathish name meaning in tamil
---Advertisement---
Advertisement

சதீஷ் பெயர் அர்த்தம்

குழந்தைக்கு பெயர் ஆனது தமிழ் பெயர், மாடர்ன் பெயர் மற்றும் தெய்வங்களின் பெயர் என இதுபோன்ற வகைகளில் ஒன்றாக தான் உள்ளது. ஆனால் அத்தகைய பெயர்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. நாம் பேசும் வார்த்தைக்கு எப்படி அர்த்தங்கள் உள்ளதோ அதனை போலவே நமக்கு சூட்டும் பெயரிற்கும் அர்த்தங்கள் இருக்கிறது. நாம் ஒரு பெயர் வைக்கும் போது அந்த பெயர் கூப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பார்க்கிறோமே தவிர அந்த பெயரின் அர்த்தம் என்னவென்று பார்ப்பது இல்லை. அதுமட்டும் இல்லாமல் குழந்தைக்கு வைக்கும் பெயரை முழுமையாக அழைக்காமல் சுருக்கி அழைக்கும் நடைமுறையும் இப்போது இருந்து கொண்டிருக்கின்றது. ஒரு பெயர் என்பது அந்த மனிதரின் தனி அடையாளம். ஆகையால் அத்தகைய பெயரில் உள்ள அர்த்தம் என்னவென்று தெரிந்து கொண்டு வைப்பது நல்லது. எனவே இன்றைய பதிவில் சதீஸ் என்ற பெயரிற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

சதீஷ் பெயர் அர்த்தம்:

சதீஷ் பெயர் அர்த்தம்

சதிஷ் என்ற பெயரிற்கு மகிழ்ச்சியான, நிதானமான, நட்பு, கவனத்துடன், அதிர்ஷ்டம் போன்ற அர்த்தங்கள் உள்ளது.

சதிஷ் என்ற பெயர் உடையவர்கள் எளிமையாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது அன்பாக இருப்பார்கள். இவர்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்க கூடியதாக இருக்கும். மேலும் இவருடைய நடை மற்றும் செயல்திறன்கள் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

இவர்களுக்கு நட்பு வட்டாரம் பெரியதாக இருக்கும். இவர்களிடம் யாரும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள். அதுமட்டுமில்லாமல் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் முன்னேற்றுவதற்கான வழிகளை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

உங்களின் தோற்றமானது அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் யாரும் சீக்கிரம் உங்களிடம் நெருங்கி பழக மாட்டார்கள். ஆனால் உங்களுடைய குணம் தெரிந்த பிறகு உங்களிடம் நன்றாக பழகுவார்கள். நீங்கள் ஒருவரிடம் பழகினால் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள். நெனெகல் நினைத்த காரியத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள்.

ஆதாயம் என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரிஞ்சுக்கோங்க..

எண் கணித முறை: 

எண் கணித மதிப்பு 3-ன் படி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச கூடிய நபராக இருப்பீர்கள். மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேச கூடிய நபராக இருக்க மாட்டீர்கள். என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசி விடுவீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.

கௌஷிக் பெயர் அர்த்தம் பற்றி தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now