Sawadee Ka Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Sawadee Ka என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். Sawadee Ka என்ற வார்த்தையானது சினிமா பாடலில் இடம்பெற்றுள்ளது. அதனால், Sawadee Ka என்றால் என்ன அர்த்தம் என்று நாம் அனைவருமே அறிந்துகொள்ள விரும்புவோம். எனவே, அப்படி நீங்கள் Sawadee Ka என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது வரும் திரைப்பட பாடல்களில் தமிழ் ஆங்கிலம் மட்டுமின்றி பல பிற மொழிகளும் இடம்பெற்று வருகிறது. அதேபோல், சமீபத்தில் அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த படத்தில் Sawadeeka பாடல் உள்ளது. இந்த அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் இந்த பாடல், கேட்பதற்கும் பார்பதற்கும் ட்ரிப்பிங்காக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகினார்கள். மேலும், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள Sawadee Ka பாடலில் உள்ள Sawadee Ka என்ற வார்த்தைக்கான அர்த்தங்களையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள்.
Chechi Malayalam Word Meaning in Tamil
What is The Meaning of Sawadee Ka in Tamil:
Sawadee Ka என்றால் “வணக்கம்” என்று அர்த்தம். ஆங்கிலத்தில் Hi, Hello என்று கூறுவோம் அல்லவா.? அதேபோல், Sawadeeka என்றால், தாய்லாந்து மொழியில் “வணக்கம்” என்று அர்த்தம் என்று கூறப்படுகிறது. தாய்லாந்து மொழி பேசும் பெண்கள் பிறரிடம் வணக்கம் சொல்வதற்கு பயன்படுத்தும் வார்த்தை தான் Sawadee Ka.
எனவே, Sawadee Ka என்ற வார்த்தைக்கான அர்த்தம் வணக்கம் என்பதாகும். இது மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
“சவாதிகா” (Sawadee Ka) என்பது பெண்களுக்கான மரியாதைக்குரிய ஒரு முறையான வாழ்த்து ஆகும். அதேபோல், “சவாதிகாப்” (Sawadikap) என்பது ஆண்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தாய்லாந்து கலாச்சாரத்தில், பெண்கள் “Ka” என்றும், ஆண்கள் “kap” என்றும் பெரும்பாலான வாக்கியங்களின் முடிவில் நாகரீகமாக கூறப்படுகிறது.
ஒரு ஆண் அதைச் சொன்னால், “Sawadee krap” என்று கூறுவார். தாய்லாந்து மொழியில் பெண்கள் பிறரிடம் வணக்கம் சொல்வதற்கு Sawadee Ka என்று கூறுவார்கள்.
ஏன் இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளை Gen Beta என்று சொல்கிறார்கள்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |