Sinam Meaning
பொதுவாக சிலருக்கு தினமும் காலெண்டர் பேப்பரை கிழிக்கும் பழக்கம் என்பது இருக்கும். இவ்வாறு காலெண்டர் கிழிக்கும் போது அவர் அவருடைய ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வார்கள். ஆனால் அதில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் அதில் கூறப்பட்டு இருக்கும். அப்படி பார்த்தால் அதில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்பது நமக்கு அவ்வளவாக தெரிவது இல்லை.
அதோடு மட்டும் இல்லாமல் நம்முடைய வீட்டில் உள்ளவர்களுக்கான பலன்களையும் பார்ப்போம். இப்படி பார்த்தும் கூட அதில் கடைசியில் எந்த பலனும் இல்லாமல் தான் போய் விடுகிறது. ஏனென்றால் அதற்கான அர்த்தம் தெரியாமலே உள்ளதல்லவா..? ஆகையால் நாம் சினம் என்ற வார்த்தையினை அதிகமாக கேள்வி பற்றிருப்போம். எனவே இன்று சினம் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!
சினம் தமிழ் பொருள்:
மனிதனாக பிறந்த அனைவருக்குமே இன்பம், துன்பம், கோபம், ஆச்சரியம் மற்றும் பயம் என இவை எல்லாம் கலந்த ஒன்று தான் வாழ்க்கையாக அமைகிறது.
நாம் இத்தகைய பண்புகள் அனைத்தினையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துவது இல்லை. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு குணத்தினையும் நாம் வெளிப்படுத்துகின்றோம்.
அந்த வகையில் சினம் என்பதற்கு கோபம் என்பதே தமிழ் பொருள் ஆகும். மேலும் நாம் அனைவருக்கும் கோபம் என்பது எப்போதும் வரவில்லை என்றாலும் கூட எப்போதாவது வரும். இவ்வாறு கோபம் வந்தால் சிலருக்கு கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது கூட சரியாக தெரிவது இல்லை.
அன்றாட வாழ்க்கையில் நாம் பேசக்கூடிய ஒரு வார்த்தைக்கு எண்ணற்ற அர்த்தங்கள் மற்றும் பொருள்கள் உள்ளன என்பதற்கு சினம் என்ற வார்த்தையும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
சினம் வேறு சொல்:
- கோபம்
- ஆத்திரம்
- மூர்க்கம்
- அகங்காரம்
- குரோதம்
- ரௌத்திரம்
- ஆவேசம்
- ஆக்ரோஷம்
- சீற்றம்
- முனிவு
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |