Slow and Steady Wins the Race என்பதன் தமிழ் அர்த்தம்.!

Advertisement

Slow and Steady Wins the Race Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில்  Slow and Steady Wins the Race என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக, ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் தெரியவில்லை என்றால் உடனே அதனை தெரிந்துகொள்ள தான் விரும்புவோம். எனவே, அந்த வகையில் நீங்கள் Slow and Steady Wins the Race என்ற ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நம்மில் பலரும் Slow and Steady Wins the Race என்பதை பல இடஙக்ளில் பிறர் கூற கேட்டு இருப்போம். ஆனால், அதற்கான தமிழ் பொருள்/அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம்.

Slow and Steady Wins the Race என்பதன் தமிழ் அர்த்தம்:

 மெதுவாகவும் நிலையாகவும்/உறுதியாகவும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதே Slow and Steady Wins the Race என்பதன் தமிழ் அர்த்தம் ஆகும்.  

Slow and Steady Wins the Race Meaning in Tamil Examples:

நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய வேண்டுமானால், உங்கள் வளர்ச்சி பாதையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவசரப்படாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் சிந்து செயல்பட்டால் நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம். Slow and Steady Wins the Race என்பதை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ஒரு கதை உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

Slow and Steady Wins the Race Story in Tamil:

ஒரு பசுமையான காட்டில் மிகவும் வேகமாக ஓடுவேன் என்று பெருமைப்படும் முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. இந்த முயல் ஆனது, எப்போது மற்ற விலங்குகளிடம் தன்னுடைய வேகத்தை பற்றி பெருமையாக பேசிக்கொண்டே இருக்குமாம். மற்ற விலங்குகள் எல்லாம் மெதுவாக ஓடுவதையும் சுட்டி காட்டுமாம். குறிப்பாக ஆமையின் வேகத்தை பற்றி கிண்டல் செய்து கொண்டிருக்குமாம்.

முயல் ஆனது ஆமையிடம், காட்டு விலங்குகளில், நான் வேகமாக ஓடுபவன். என்னை யாரம் தோற்கடிக்க முடியாது. குறிப்பாக நீ என்னை தோற்கடிக்க முடியாது. என்று ஏளனமாக கூறியது. அதுமட்டுமில்லாமல் ஆமையை மெதுவானே மெதுவனே என்று கிண்டல் செய்தது.

Slow and Steady Wins the Race Story in Tamil

இதேபோன்று பல காலம் சொல்லிக்கொண்டு இருந்தது முயல். ஒருநாள், முயலின் பெருமையால் களைத்து போன ஆமை போட்டியில் ஈடுபட சவால் விட்டது. முஐல் அதனை கேட்டு சிரித்தது. அதன் பிறகு, ஒரு நாள் காட்டில் முயலுக்கும் ஆமைக்கும் போட்டி நடைபெற இருந்தது. போட்டியை பார்க்க காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் கூடி இருந்தது.

போட்டி தொடங்கியதும், முயல் வேகமாக ஓடி சென்று ஆமையை பின்னால் விட்டு விட்டது. நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்ற எண்ணத்தில் பின்னால் திரும்பி ஆமை எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்தது. ஆமை மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த முயல் எப்படியும் நாம் தான் வெற்றி அடைய போகிறோம், வெற்றி பெறுவதற்கு இன்னும் அதிக நேரம் உள்ளது என்று எண்ணி, மரத்தடிக்கு அடியில் உறங்க சென்றது. சிறிது நேரம் ஓய்வடுத்து, அதன் பிறகு இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நினைத்து முயல் உறங்க சென்றது.

இந்நிலையில் ஆமை எந்த நேரத்திலும் தான் செல்வதை நிறுத்தாமல் சீராக சென்று கொண்டிருந்தது.  சிறிது நேரத்தில் ஆமை போட்டியின் முடிவு கோட்டை அடைந்தது. அப்போது முயல் முழித்து ஆமை வெற்றி கோட்டிற்கு அருகில் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றது. இறுதியில் ஆமை வென்றது.

Slow and Steady Wins the Race Meaning in Tamil Examples

என்னதான் முயல் மிக வேகமாக ஓடி இருந்தாலும் ஆமையை வெல்ல முடியவில்லை. ஆனால், ஆமையோ நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்பட்டு போட்டியில் வெற்றி பெற்றது.

எனவே,வெற்றிக்கு அவசியம் பொறுமையும் உறுதியுமே தவிர, அவசரமும் நிதானமின்மையும் இல்லை என்பதே இக்கதையின் பொருள் ஆகும்.

மெதுவாகவும் நிதானமாகவும் சென்றால் வெற்றி நிச்சயம்.!

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement