Sri Rama Jayam Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் “ஸ்ரீராம ஜெயம்” என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்வோம். அசுரர்களை அழித்து தர்மத்தின் பாதையை நிலைநாட்ட பூமியில் அவதரித்த விஷ்ணுவின் அவதாரம் தான் ராமர். இந்துக்களால் காலம் காலமாக உச்சரிக்கப்படும் எளிமையான மந்திரம் தான் Sri Rama Jayam. ஸ்ரீ ராம ஜெயத்தை நாம் அனைவருமே உச்சரித்து இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Sri Rama Jayam Meaning in Tamil விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீராம ஜெயம் என்பதன் தமிழ் அர்த்தம்:
“ஸ்ரீராம ஜெயம்”
ஸ்ரீராம ஜெயம் என்றால், தமிழில் ‘ராமருக்கு வெற்றி’ என்பது ஆகும். இது மிகவும் பிரபலமான கோஷமாகும். இது சபை மந்திரம் மற்றும் நாம ஜப் எழுதுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மந்திரம் நம்பிக்கையைத் தூண்டுகிறது மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துகிறது.ஸ்ரீ ராம ஜெயம் என்றால் என்ன.?
“ஸ்ரீராம ஜெயம்’ எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த மந்திரம் ஸ்ரீராம ஜெயம். வட இந்தியாவில் உள்ள பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷத்தை கூறுவார்கள். இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, அசோகவனத்திலே இருந்த சீதாதேவியின் மனதில் தன் கணவர் வெற்றிவாகை சூடிவிட்டாரா என்ற தகவல் ஏதுமில்லையே என்று குழப்பத்தில் இருந்தாள். அந்நேரத்தில் சீதா தேவியின் முன்னாள் வந்து நின்ற அனுமன் “ஸ்ரீராம ஜெயம்” என்ற கோஷத்தை எழுப்பினார். அதாவது, ராமன் ஜெயித்துவிட்டார் என்பதை “ஸ்ரீராம ஜெயம்” என்ற ஒரே வார்த்தையில் கூறிவிட்டார்.
ரா – ரா என்றால் அக்னி பீஜம். பீஜம் என்றால் மந்திரம். இது அகங்காரத்தை அளிக்கும் தன்மை என பொருள்படும்.
ம – ம என்றால் “அமிர்த பீஜம்’. அது மனதில் அன்பை நிறைக்கிறது.
எனவே “ராம’ என்று சொன்னால் ஒரு செயலில் வெற்றி கிடைத்து விடும். அதனால் தான் “ராம’வுடன் “ஜெயம்’ (வெற்றி) சேர்க்கப்பட்டது.
ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம் !!!
ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |