வாடகைத் தாய் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

வாடகைத் தாய் பற்றிய தகவல்கள்..!

வணக்கம் நண்பர்களே… இன்று நம் பொதுநலம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். தினமும் புது புது தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். நாம் இன்று வாடகைத் தாய் என்பது என்ன என்றும் வாடகைத் தாய் பற்றிய தகவல்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வாடகைத் தாய் என்றால் என்ன:

வாடகைத் தாய்

தாய்மை என்பது பெண்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரம். குழந்தை இல்லையென்று பல பெண்கள் கவலைபடுகிறார்கள். அந்த வகையில் அதனை சரி செய்வதற்கு இன்றைய காலகட்டத்தில் நிறைய மருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருக்கிறது. வளர்ந்துகொண்டும் இருக்கிறது.

அப்படி கண்டுபிடிக்கபட்ட ஒரு முறை தான் இந்த வாடகைத் தாய். இந்த வாடகைத் தாய் என்பதை ஆங்கிலத்தில் Surrogacy என்று கூறப்படுகிறது. இந்த முறை குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோர்களுக்காக கொண்டுவரப்பட்டது.

எந்த அறிகுறியும் இல்லாமல் கர்ப்பம் எப்படி இருக்கும்

 

ஒரு பெண்ணின் கர்ப்பப்பை பலபவீனமாக இருந்தாலோ அல்லது ஏதோ ஒரு  காரணத்தினால் கர்ப்பம் ஆக முடியாமல் இருந்தாலோ குழந்தையை சுமக்க முடியாமல் இருக்கும் அந்த பெண்ணிற்காக வேற பெண் அந்த குழந்தையை பெறுவதே வாடகை தாய் முறை ஆகும்.

வாடகைத் தாய் என்பது  ஒரு பெண் வேறவொரு பெண்ணிற்காக தன்னுடைய கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையை வாடகைத் தாய் என்று கூறுகிறார்கள்.

இதுபோன்று வேறவொரு பெண்ணின் கர்ப்பத்தை தாங்கும் பெண்ணை சரோகேட் மதர் அதாவது வாடகைத் தாய் என்று அழைக்கபடுகிறது. இது ஒரு மரபியல் மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் முறை ஆகும்.

இதுபோன்று குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கும் அந்த குழந்தைக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காது. இதுபோன்ற செயல் முறையானது குழந்தை இல்லாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு வரமாக உள்ளது.

கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம்

 

இதில் ஒரு சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற மனப்பான்மையுடன் வருபவர்களும் உண்டு. அதேபோல் ஒரு சிலர் இதுபோன்று உதவி செய்து அதற்காக உதவித்தொகை பெறுபவர்களும் உண்டு.

வாடகைத் தாய் முறை எப்படி வேலை செய்கிறது:

  • வாடகைத் தாயின் முறையில் ஒரு பெண்ணின் கருமுட்டையில் ஒருவரின் விந்தணுவை கொண்டு விந்தணு தானம் செய்து கருவை உருவாக்குவதே ஆகும்.
  • பின் ஒரு வாடகைத் தாயின் கர்ப்பப்பையில் அந்த கருவை பொருத்தப்பட்டு, அந்த வாடகைத் தாய் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பார்.
  • இந்த முறையில் கருமுட்டை தாயிடம் இருந்தும், விந்தணு தந்தையிடம் இருந்தும் சேகரிக்கப்படுகிறது. இந்த இரண்டுமே சட்டபூர்வமாக பெற்றோர்களிடமிருந்தே பெறப்படுகிறது.
மேலும் இது போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –>  அர்த்தம்
Advertisement