தாரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Thara Name Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் தாரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் அடையாளப்படுத்தி காட்டுவது அவற்றின் பெயர் தான். அதாவது பெயர் தான் ஒவ்வொருவருடைய அடையாளம். ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டிருக்கும். ஆனால் நம்மில் பலபேர் தமக்கு சூட்டப்பட்டுள்ள பெயருக்கான அர்த்தத்தையே தெரிந்து கொள்வதில்லை. எனவே நீங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல பெயர்களுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இப்பதிவில் தாரா என்ற பெயருக்கான அர்த்தத்தை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

What is The Meaning of Thara in Tamil:

What is The Meaning of Thara in Tamil

தாரா என்ற பெயர் நட்சத்திரம், செல்வம் மற்றும் உலகம் போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. இப்பெயர் இந்து மதத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர் ஆகும்.

தாரா என்ற பெயருடையவர்கள் வெளிப்படையாக பேசும் குணமுள்ளவர்களாக இருப்பார்கள். இப்பெயருடையவர்கள் சமூக திறன் கொண்டவர்களாகவும் படைப்புதிறன்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள்.

இவர்கள், அதிக நண்பர்களை உருவாக்கி கொள்வார்கள். மேலும் எளிமையாகவும் அன்பாகவும் நடந்து கொள்ளும் குணமுடையவர்கள்.

இந்த பெயர் உடையவர்கள் எந்த வேலையை செய்தாலும் அதனை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பார்கள். இவர்களிடம் அன்பும், கருணையும் இயற்கையாகவே காணப்படும். கனவை நினைவாக்க வேண்டும் என்று அதற்காக கடுமையாக உழைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

பொறுப்புகள் அதிகமாக காணப்பட்டாலும் அதனை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டும் திறன் இவர்களிடம் காணப்படும். மேலும் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர்களாக இருப்பார்கள். இந்த பெயர் உடையவர்களிடம் இயற்கையாகவே ஆளுமை திறன் காணப்படும்.

Thara Name Numerology in Tamil:

NAME  NUMEROLOGY NUMBER 
2
8
1
9
1
TOTAL  21

எண்கணித முறைப்படி தாரா என்ற பெயருக்கு 21 என்ற எண் மொத்த மதிப்பெண்ணாக கிடைத்துள்ளது. எனவே 21 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (2+1)=3 ஆகும். அதாவது, தாரா என்ற பெயருக்கு 3 என்பது அதிர்ஷ்ட எண் ஆகும்.

பெயரின் கூட்டுத்தொகை 3 -ஆக இருப்பவர்கள் எப்போதும் வெளிப்படையான எண்ணத்துடனும் படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். தாரா என்ற பெயருக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு ஆகும்.

நேர்மறை குணங்கள்:

  • புத்திசாலித்தனம் & கற்பனை திறன் காணப்படும்.
  • தன்னம்பிக்கை & முடிவெடுக்கும் திறன் இவர்களிடம் இருக்கும்.
  • அன்பு, கருணை, உதாரண சிந்தனை போன்றவை இருக்கும்.
  • சுறுசுறுப்பும் செயல்திறனும் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

தாரா ஸ்ரீ பெயர் அர்த்தம்:

தாரா ஸ்ரீ” என்ற பெயர் “விண்மீன் போன்ற ஒளிமிக்க செழிப்பானவர்” அல்லது “பிரகாசம் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டவள்” என்பது அர்த்தமாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள் 
கோபிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?
Maiden என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா..?
உங்களின் பெயர் குமார் என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி..?

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement