Thiruvalarselvan Thiruvalarselvi Meaning in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றனை பற்றி பார்க்கலாம். அதாவது, கல்யாண பத்திரிக்கையில் திருவளர்செல்வன் திருவளர்செல்வி என்று குறிப்பிடுவதன் அர்த்தம் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக, நாம் பெரும்பாலான கல்யாண பத்திரிக்கையில் திருவளர்செல்வன் திருவளர்செல்வி என்றும், திருநிறைச்செல்வன் திருநிறைச்செல்வி என்று போடப்பட்டிருப்பதை பார்த்து இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் பற்றி நம்மில் பலப்பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில், திருவளர்செல்வன், திருவளர்செல்வி என்பதற்கான அர்த்தத்தையும் மற்றும் திருநிறைச்செல்வன் திருநிறைச்செல்வி என்று போடப்பட்டிருப்பதற்கான அர்த்தத்தை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
திருவளர்செல்வன் திருவளர்செல்வி என்பதன் அர்த்தம்:
திருவளர்செல்வன்:
கல்யாண பத்திரிக்கையில் திருவளர்செல்வன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இது எங்கள் வீட்டு மூத்த மகனின் திருமணம் என்பது அர்த்தமாகும். அதுமட்டுமில்லாமல், மூத்த மகனிற்கு அடுத்து எங்கள் வீட்டில் இளைய மகள்களும் இளைய மகன்களும் உள்ளார்கள் என்பதை தெரிவித்து, உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு சம்மந்தம் பேச வரலாம் என்பதை மறைமுகமாக தெரிவிப்பது ஆகும்.
திருவளர்செல்வி:
கல்யாண பத்திரிக்கையில் திருவளர்செல்வி என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இது எங்கள் வீட்டு மூத்த மகளின் திருமணம் என்பது அர்த்தமாகும். அதுமட்டுமில்லாமல், மூத்த மகளிர்க்கு அடுத்து எங்கள் வீட்டில் இளைய மகள்களும் இளைய மகன்களும் உள்ளார்கள் என்பதை தெரிவித்து, உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு சம்மந்தம் பேச வரலாம் என்பதை மறைமுகமாக தெரிவிப்பது ஆகும்.
திருமண பத்திரிகையில் இருக்கும் RSVP என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.?
திருநிறைச்செல்வன் திருநிறைச்செல்வி என்பதன் அர்த்தம்:
திருநிறைச்செல்வன்:
கல்யாண பத்திரிக்கையில் திருநிறைச்செல்வன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இது எங்கள் வீட்டு இளைய மகனின் திருமணம் என்பது அர்த்தமாகும். அதுமட்டுமில்லாமல், இளைய மகனிற்கு அடுத்து எங்கள் வீட்டில் திருமணத்திற்கு யாரும் இல்லை என்று, இதுவே எங்கள் வீட்டின் கடைசி திருமணம் ஆகையால், உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு சம்மந்தம் கேட்டு வராதீர்கள் என்பதை மறைமுகமாக தெரிவிப்பது ஆகும்.
திருநிறைச்செல்வி:
கல்யாண பத்திரிக்கையில் திருநிறைச்செல்வி என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இது எங்கள் வீட்டு இளைய மகளின் திருமணம் என்பது அர்த்தமாகும். அதுமட்டுமில்லாமல், இளைய மகளிர்க்கு அடுத்து எங்கள் வீட்டில் திருணத்திற்காக யாரும் இல்லை என்று, இதுவே எங்கள் வீட்டின் கடைசி திருமணம் ஆகையால், உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு சம்மந்தம் கேட்டு வராதீர்கள் என்பதை மறைமுகமாக தெரிவிப்பது ஆகும்.
மாங்கல்யம் தந்துனானே மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா.?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |