Thulasi Name Meaning In Tamil
இன்றைய பதிவில் துளசி பெயருக்கான அர்த்தம் என்பதை பற்றி பார்க்க போகிறோம்.குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களை பார்த்து பார்த்து வைக்கின்றனர். ஏனென்றால் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவரின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. இந்த பெயரில் பல வகைகள் இருக்கிறது. வகைகள் என்றால் ஒன்றுமில்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைப்பார்கள். சில நபர்கள் தூய்மையான பெயராகவும், முன்னோர்களின் பெயராகவும், மாடர்ன் பெயராகவும் வைப்பார்கள்.இப்படி வகை வகையாய் வைக்க தெரிந்தவர்களுக்கு அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை.
மேலும், சிலர் நியூமராலஜி படி வைப்பார்கள். சிலர் மாடர்னாக வைப்பார்கள். சிலர் அவர்களுக்கு பிடித்த பெயரை குழந்தைகளுக்கு வைப்பார்கள். ஆனால் வைக்கும் பெயருக்கான அர்த்தம் கேட்டால் அந்த அளவிற்கு யாருக்கும் தெரியாதுஅர்த்தம் தெரியாமலே குழந்தைக்கு பெயரினை வைத்து விட்டீர்கள் என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் துளசி பெயருக்கான அர்த்தம் பற்றி பார்க்கலாம் வாங்க….
துளசி பெயருக்கான அர்த்தம்:

- சந்திர ராசியை அடிப்படையாக கொண்ட வேத ஜோதிடத்தில் துளசி என்ற பெயரை கொண்டவர்கள் தங்கள் வேலைகளிலும், சக பணியாளர்களுடனும் உண்மையாக இருக்கும் குணம் கொண்டவர்கள்.
- இவர்கள் தங்களின் சொந்த விருப்பத்திற்கேற்ப தங்கள் வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.இவர்கள் சொந்த படைப்பாற்றலான கற்பனை உலகில் வாழ விரும்புகிறார்கள்.
- இந்த பெயரை கொண்டவர்களுக்கு ஆன்மீக பக்தி அதிகமாக கொண்டவர்கள். அவர்கள் ஆன்மீக பக்கதர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் மத விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.
- துளசி என்ற பெயரை உடையவர்கள் சுய சிந்தனை கொண்டவர்கள்.அவர்கள் அனைத்தையும் அவர்களுக்கு ஏற்றார்ப்போல் இயக்க முயற்சி செய்வார்கள்.
- இந்த பெயரை உடையவரிடம் யார் போட்டி போட்டாலும் அவர்கள் தோல்வியை அடைவார்கள்.இவர்கள் செல்வாக்கு மற்றும் மிகுந்த ஆற்றல் கொண்டவர்கள்.
- இவர்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் அனைவரையும் நேசிக்க கூடியவர்கள். அதிக தேசபக்தியை கொண்டவர்கள் ஆவார்கள்.
- இவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 9 உடையவர்கள். இவர்கள் பொதுவாக இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள்.இவர்கள் முகுந்த படைப்பாற்றல் கொண்டவர்கள்.
கணித எண் முறை:
எண் கணித மதிப்பு 9-ன் படி வெற்றி, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமானம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
|
பெயர் |
பெயருக்கான எண் |
|
T |
2 |
|
H |
8 |
|
U |
2 |
|
L |
1 |
|
A |
1 |
|
S |
1 |
|
I |
9 |
|
Total |
24 |
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














