துவிதியை என்றால் என்ன
நம்முடைய காலண்டரில் பலவை கூறப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கும். அவையாவும் நமக்கு தெரியுமா என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் தெரியாது என்பதே இருக்கும். அதில் திதி, சந்திராஷ்டமம், நல்ல நேரம், ராகு கோலம் போன்றவை என்ன என்பது தெரியும். அவற்றில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.
பின் அதில் துவிதியை என்று பதிவிட்டிருக்கும். அவை எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது, அதன் பயன்பாடு, துவிதியை என்றால் என்ன என்பதை பற்றி எல்லாம் தெரிந்திருக்காது. அதனால் தான் இந்த பதிவில் துவிதியை என்றால் என்ன, அதன் அர்த்தம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம் வாங்க.
துவிதியை என்றால் என்ன:
துவிதியை திதி: ‘துவி’ என்றால் இரண்டு பொருள்படுகிறது, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாளை தான் துவிதியை என்று அழைக்கிறோம். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவிதியை கிருஷ்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் துவிதியை இரு கண்ணுள்ள திதி எனவும் அழைப்பார்கள்.
துவிதியை திதியில் என்ன செய்யலாம்:
துவிதியை நாளானது பிரம்மாவுக்கு ஏற்றதாக இருக்கிறது. ஆகவே இந்நாளில் புத்தி மனை மற்றும் எல்லா சுபகாரியங்களும் செய்யலாம்.மேலும் நீங்கள் புதிதாக வேலைக்கு செல்பவராக இருந்தாலும் இந்நாளில் செல்லலாம். நகை வாங்குவது, வாகனம் வாங்குவது, ஆடை வாங்குவது போன்ற காரியங்கள் செய்யலாம்.
ஒருவரிடம் இந்த செயலை செய்கிறேன் அல்லது உனக்கு பணம் கொடுக்க முயற்சி செய்கிறேன் என்று கூறினால் அந்த வார்த்தையை காப்பற்ற வேண்டும் நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
துவிதியை திதியில் என்ன செய்யகூடாது:
புதன்கிழமையில் வரும்துவிதியில் எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்ய கூடாது. ஏனென்றால் நீங்கள் செய்யும் நல்ல காரியங்களில் பிரச்சனை ஏற்படும். இல்லையென்றால் அந்த செயலானது தடைபடும். அதனால் இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யவதை தவிர்த்திடுங்கள்.
துவிதியை திதியில் பிறந்தால்:
துவிதியை திதி பிறந்தவர்கள் நேர்மையான குணம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் வாயிலிருந்து பொய்யே வராது. உண்மையை மட்டும் சொல்பவராக இருப்பார்கள். மற்றவர்களின் உதவி இல்லாமல் நீங்களே வாழ்க்கையில் முன்னேற கூடியவராக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்.
துவிதியை திதியின் தெய்வங்கள்:
- துவிதியை திதியின் வளர்பிறை தெய்வமாக இருப்பது பிரம்மா
- துவிதியை திதியின் தேய்பிறை தெய்வமாக இருப்பது கிருஷ்ணர், வாயு பகவான்.
கடவுள்:
இந்த திதியில் பிறந்த தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மேலும் இந்த திதியில் அம்பிகையை வழிபடுவது உங்களுக்கு நன்மையை அளிக்கும்.
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














