துயரம் என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Thuyaram Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதில் துயரம் என்பதற்கான அர்த்தம் என்ன என்பதையும், துயரம் என்பதை குறிக்கும் வேறு சொற்கள் பற்றியும் இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக, பெரும்பாலும் தமிழில் உள்ள தூய சொற்களுக்கான அர்த்தம் நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களைவிட தூயதமிழ்  சொற்களுக்கான அர்த்தம் தெரிவதில்லை. ஆகையால், துயரம் என்ற தமிழ் சொல்லின் பொருள் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

துயரம் Meaning in Tamil:

துயரம் என்பது ஒருவிதமான துக்க உணர்வு ஆகும். துயரம் என்பதை துக்கம் என்று கூறலாம். துக்கம் துயரம் இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் துயரம் என்பது வலியினால் ஏற்படும் சோகமான உணர்ச்சியாகும்.

துயரம் Meaning in Tamil

 துயரம் என்றால் என்ன.?

தோல்வி, நட்டம், இயலாமை, சோகம் போன்றவை ஏற்படும்போது ஏற்படக்கூடிய துன்பம், துக்கம் துயரம் எனப்படும். துன்ப உணர்வு அல்லது துன்பநிலை துயரம் ஆகும்.

துயரம் வேறு சொல்:

  • துக்கம்
  • வருத்தம்
  • சோகம்
  • துன்பம் 

துயரம் Meaning in English:

துயரம் என்பதற்கு ஆங்கிலத்தில் Grief என்பது அர்த்தமாகும்.

துயரம் எதிர்ச்சொல்:

துயரம் என்பதை குறிக்கும் எதிர்ச்சொல் மகிழ்ச்சி ஆகும். ஆகையால் இதனை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் துயரம் என்றால் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் நிலை என்று.

துயரம் அடங்கிய வார்த்தைகள்:

  • பிறர் துயரத்தைப் போக்க வேண்டும் என்ற அக்கறை யாருக்கும் இல்லை.
  • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம்.
  • துயரத்தில் உள்ளவர்கள் அழுகும் மனநிலையில் இருப்பார்கள்.

துயரம் கவிதை:

துயரம் நிறைந்த
பாதையில் சிறு வெற்றிகளே
நம்பிக்கையை தருகின்றது

தொடர்புடைய பதிவுகள் 
நாத்தனார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
களிப்பு என்பதன் தமிழ் அர்த்தம்
BOT என்பதன் தமிழ் அர்த்தம்!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link 
Advertisement