Tofu Meaning in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் கூறப்போகிறேன். பொதுவாக நம்மில் பலரும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைக்கும் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அதுபோல இன்றைய பதிவு என்ன பதிவு என்று நீங்கள் மேலே படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதாவது டோஃபு என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? உடனே நீங்கள் இதை பன்னீர் என்று சொல்வீர்கள் ஆனால் இது பன்னீர் கிடையாது. அப்புறம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா..? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
டோஃபு என்று பலபேர் கூறி கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் டோஃபு என்றால் என்ன என்பதே தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
பன்னீர் சாப்பிடுவதால் இவ்வளவு இருக்கா.. இது தெரிஞ்சா இனிமேல் சாப்பிட மாட்டீங்க |
டோஃபு என்றால் என்ன..?
பொதுவாக சோயாபீன் பாலில் இருந்து வரும் தயிர் வடிவத்திற்கு பெயர் தான் டோஃபு என்று அழைக்கப்படுகிறது. இது சாஃப்ட் டோஃபு, சில்கென் டோஃபு, ஃபர்ம் டோஃபு, பெர்மெண்டெட் டோஃபு என்று பல வகைகளில் இது கிடைக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை கொண்டது.
உங்களுக்கு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் பன்னீர் என்பது பாலில் உள்ள முழுமையான கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு பொருள் ஆகும்.
அதேபோல டோஃபு என்பது சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு பொருள் ஆகும். இதிலும் பல ஊட்டச்சத்துகள் இருக்கிறது. ஆனால் இது பன்னீர் போலத்தான் இருக்கிறது.
இந்த டோஃபு பல நூற்றாண்டுகளாக பல ஆசிய நாடுகளில் பிரதான உணவாக இருந்து வருகிறது. இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உணவு பொருள் என்று கூறப்படுகிறது.
தினமும் பன்னீர் சாப்பிடுபவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்
டோஃபு ஊட்டச்சத்து நன்மைகள்:
டோஃபு என்பது புரதம், இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இந்த 100 கிராம் டோஃபுவில் சுமார் 8 கிராம் புரதம் உள்ளது. மேலும் இதில் அதிகப்படியான அமினோ அமிலங்கள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதில் வெவ்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கி உள்ளது. இதில் கால்சியம், மெக்னீசியம், காப்பர், வைட்டமின் A மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |