Toned Milk என்றால் என்ன மற்றும் அதன் அர்த்தம்

Advertisement

டோன்ட் பால் என்பதன் அர்த்தம் தமிழில்

பால் குடிக்காமல் யாரும் இருந்திருக்கவே மாட்டோம். நம் அன்றாட வாழ்வில் டீ ,காபி என்று பால் ஏதோ ஒரு வழியில் இடம்பெற்றிருக்கும். பாலில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் பல் மற்றும் எலும்புகளுக்கு இது வலுகொடுக்கின்றது. பெரும்பாலும் பசும்பால் மற்றும் பாக்கெட் க்ரீம் பாலை பயன்ப்படுத்தி வருகிறோம் அவைகளில் அதிகப்படியான கொழுப்புகள் இருப்பதால் உடல் அதிக பருமன் அடைகிறது.

எந்த ஒரு உடல் எடை அதிகரிப்பு டிப்ஸிலும் பால் இல்லாமல் இருந்ததில்லை. அந்தளவிற்கு எடை அதிகரிப்பிற்கு பால் உதவுகிறது. இதனால் ஆல்ரெடி உடல் பருமன் இருப்பவர்கள் பால் என்றாலே பயப்படுகிறார்கள். அதனால்  பாலில் கொழுப்புகளை மட்டும் பிரித்து எடுக்கப்பட்ட டோன்ட்  பாலை கண்டுபிடித்து உள்ளனர். டோன்ட்  பால்   என்பது பவுடர் பால் அல்லது பசும்பாலில் தண்ணீர் சேர்த்து   கொழுப்புநீக்கப்பட்டு சுத்திகரித்து கடைகளில் விற்கப்படுகிறது. மேலும் டோன்ட் பாலின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி  பார்ப்போம்.

Toned Milk என்றால் என்ன ? அதன் பயன்கள்

இந்த டோன்ட் பால் முதல் முறையாக இந்தியாவில் பால் பவுடர் அல்லது தண்ணீர் சேர்த்து  உருவாக்கப்பட்டது. பசும்பால் மற்றும் மற்ற பாக்கெட் பாலில்  காணப்படும் கொழுப்புகளை காட்டிலும் இந்த டோன்ட்  பாலில் கொழுப்புகள் குறைவாக உள்ளது. அதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த டோன்ட்  பாலை குடிக்கலாம். கொழுப்புகள் குறைக்கப்பட்ட ஸ்கிமிட் பால், இரட்டை டோன்ட்  பால், டோன்ட்  பால் என மூன்று வகைகள் இருக்கின்றன. டோன்ட்  பாலை ஒரு நாளைக்கு இரண்டு முறை 3 லிருந்து 12 வயது மேற்பட்டவர்கள் குடிக்கலாம். பசும்பாலில் இருக்கும் அதே கால்சியம் தான் இதிலும் இருக்கிறது. ஆனால் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளது அவ்வளவு தான் வித்தியாசம்.

டோன்ட்  பாலின் நன்மைகள்

  • இயல்பாகவே டோன்ட்  பாலில் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
  • டோன்ட்  பால் அதிக பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.

டோன்ட்  பாலின் கலோரியின் அளவு

ஒரு கப் டோன்ட்  பாலில் 150 கலோரிகள் உள்ளன. ஒரு கப் சாதாரண பாலில் 285 கலோரிகள் உள்ளன. டோன்ட்  பாலில் இருக்கும் கலோரிகள் கார்போஹைட்ரேட்டில் இருந்து வருகிறது. இதனால் தான் டோன்ட்  பாலின் கொழுப்பு குறைவாக உள்ளது. இதனால் அதிக உடல் எடை உள்ளவர்கள் இந்த பாலை குடிப்பதன் மூலம் உடல் எடை அதிகளவில் கூடாமல் இருக்க உதவுகிறது. உயரத்தின் அளவை விட அதிகமாக  உடல் எடை உள்ளவர்கள் இந்த பாலை பருகலாம். இது கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றது.

இரட்டை டோன்ட்  பால்

டோன்ட்  பால் போலதான் இந்த  இரட்டை டோன்ட்  பாலும் இதிலும் கொழுப்புகள் குறைவாகவே உள்ளன. டோன்ட்  பாலை விட 9 % சதவிகிதம் கொழுப்புகள் குறைக்கப்படுகிறது. இதனை கொதிக்க வைக்காமல்  குடிக்கலாம்.

ஸ்கிமிட் பால்

சாதாரண பாலில் இருந்து பாலின் கொழுப்பு தன்மை முழுமையாக அகற்றப்படும்போது அது ஸ்கிமிட் பால் எனப்படும். இதில் 0.1%  மட்டுமே கொழுப்பு உள்ளது. இது ஆடைநீக்கப்பட்ட பாலாகும்.

கொழுப்பு நீக்கப்பட்ட பாலின் தீமைகள்

கொழுப்புநீக்கப்பட்ட பாலில் கலோரிகள் குறைவு ஆனால் அதில் குறைவுள்ள கொழுப்பு  கெட்ட  கொழுப்பை உண்டாக்குகிறது.  இதன் விளைவாக இதய நோய்களை உண்டாக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.

பால் வகைகள் இத்தனை உள்ளதா..? அதுவும் ஆர்கானிக் முறையில் இருக்கும்..!

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement