Trypanophobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Trypanophobia meaning in tamil 

நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். அதாவது எனக்கு தான் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் மற்றவர்களிடம் இருந்து நான் மிகவும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். அதற்கு முதலில் நமக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி நமக்கு அனைத்து தகவல்களும் தெரிய வேண்டும் என்றால் முதலில் நாம் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நாம் அன்றாட வாழ்க்கையில் பலவகையான வார்த்தைகளை பேசி வருகின்றோம். அப்படி நாம் பேசும் வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். எனவே தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த அவரிசையில் இன்றைய பதிவில் trypanophobia என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

டிரிபனோபோபியா | Trypanophobia:

trypanophobia meaning in tamil

டிரிபனோபோபியா என்பது  ஒரு வகையான நோயை குறிக்கும் சொல்.  அதாவது டிரிபனோபோபியாவால் பாதிக்கப்பட்டவர் ஊசி மற்றும் இரத்தங்களை பார்த்து அதிக அளவில் பயம் கொள்வர்கள். டிரிபனோபோபியா பொதுவானது என்றாலும், அது அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அளவில் தலையிடலாம். இந்த பாதிப்பு உள்ளவர்கள், தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு தாமதப்படுத்தலாம் அல்லது தவிர்க்கலாம்.

டிரிபனோபோபியா யாருக்கு ஏற்படலாம்?

ஊசி மற்றும் இரத்தங்களின் மீது எதிர்மறையான அல்லது அதிர்ச்சியுறும் செயல்கள் முற்காலத்தில் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும்.

இது ஒரு சிலருக்கு ஜின்களிலும் இருக்கக்கூடியதாக இருக்கும்.

ஹைபோகாண்ட்ரியா அல்லது ஜெர்மாஃபோபியா போன்ற நோய் தாக்குதல் உள்ளவர்கள்.

மருந்து தொடர்பான அச்சங்கள் மற்றும் தெளிவற்ற மனநிலை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனைகள் இருக்கலாம்.
மன அழுத்தம் இவர்களையும் இது எளிதில் பாதிக்க கூடும்.

பொதுவாக இந்த பயம் 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு இருக்கும் என ஆய்வு கூறுகிறது. இது அவர்களின் வளர்ச்சியை தொடர்ந்து நீங்க கூடியது. 16% பெரியவர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது.

Nomophobia என்றால் என்ன? | நோமோபோபியா விளக்கம்!

டிரிபனோபோபியாவின் அறிகுறிகள் என்ன?

ஊசி பயம் மக்களில் சிலருக்கு ஏற்படுகிறது. இந்த பாதிப்பால் அவர்கள் சில நேரங்களில் மனதைரியத்தை இழக்கக்கூடும்.

  • தலைச்சுற்றல் அல்லது மயக்கம்.
  • இதய படபடப்பு .
  • தூக்கமின்மை .
  • குமட்டல் மற்றும் வாந்தி .
  • இரத்த அழுத்தம்  அதிகரிப்பது.

இது போன்ற உங்களுக்கு அர்த்தம் தெரியாத பல வார்த்தைகளின் விளக்கம் அர்த்தங்களை தெரிந்துகொள்ள எங்கள் தளத்தை பின்தொடருங்கள்.

Globetrotter என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement