U என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா..! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

U Letter Name Personality in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் U என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தை கொண்டிருப்பார்கள். ஒரே மாதிரியான குணத்தை எல்லோரும் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கும். சில நபர்கள் மற்றவர்களிடம் என் குணத்தை சொல்லு என்று தொந்தரவு செய்வார்கள். ஆனாலும் மற்றவர்கள் சொல்வதை விட நீங்களே உங்களின் குணத்தை தெரிந்து கொண்டால் நன்றாக தான இருக்கும். அந்த வகையில் என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ E என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பம் ஆகிறதா..! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்

U என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் எப்படி இருப்பார்கள்:

U என்ற எழுத்தை பெயர் ஆரம்பிப்பவர்கள் அழகான பொருட்களாக இருந்தாலும் சரி, காட்சிகளாக இருந்தாலும் சரி பார்ப்பதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எந்த செயல் செய்தாலும் தன்னமிக்கையாக செய்வார்கள். மேலும் அந்த செயலை கவனமாகவும், நிதானமாகவும் செய்வார்கள்.

இவர்கள் மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக பேசுவார்கள். குடும்ப உறவினர்களிடம் நேரத்தை கழிப்பார்கள்.

மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அக்கறையாக, அன்பாகவும் பார்த்து கொள்வார்கள். இசை கேட்பது, படம் பார்ப்பது, ஓவியம் வரைதல் போன்ற கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

இவர்களின் நெருங்கிய நண்பர்களிடம் கூட குடும்ப விஷயங்களை ஷேர் செய்ய மாட்டார்கள். மேலும் நகைகளின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும்.

ஆடைகள் மற்றும் நகைகள் வாங்குவதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் பணம் அதிகமாக இருந்தால் அதை ஒரு முதலாக சேர்ப்பார்கள்.

மற்றவர்களை இவர்கள் புகழ்ந்தால் மிகவும் பிடிக்கும். செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

மற்றவர்களை கவரும் வகையில் இவர்களின் தோற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை அதிகம் செலுத்துவார்கள்.

இவர்கள் வீட்டில் பூச்செடிகள், காய்கறி செடிகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். மேலும் இவர்கள் புதிது புதிதாக விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எந்த துறையில் பணி புரிந்தாலும் அதில் சிறந்து விளங்குவார்கள். மேலும் மற்றவர்களின் நிறுவனத்தில் சென்று வேலை பார்ப்பதை விட சுயமாக தொழில் செய்வதை தான் விரும்புவார்கள்.

இவர்கள் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டார்கள். ஆனால் உதவி என்று யார் கேட்டாலும் தயங்காமல் செய்வார்கள்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement