யுனிகார்ன் Company என்றால் என்ன? What is Unicorn Company Meaning in தமிழ்?

Unicorn company meaning tamil

Unicorn Startup Company meaning Tamil | இந்தியாவில் எத்தனை யுனிகார்ன் நிறுவங்கள் உள்ளது ?

வணக்கம் நண்பர்களே!, புதிய புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் முளைத்து கொண்டே இருக்கின்றது. அதனால் இன்றைய இந்தியாவில் பல மாற்றங்கள் நாளுக்கு நாள் நடந்துகொண்டு இருக்கின்றது. நமது இந்தியா உலகின் 3வது ஸ்டார்ட்அப் சுற்றுப்புற சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. முதலில் அமெரிக்கா அடுத்த படியாக சீனா இருக்கின்றது. அதிலும் இந்தியாவில் இதுவரை 106+ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் Unicorn அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் ஸ்டார்ட்அப் என்றால் என்ன? என்பது கூட நெறய பேருக்கு தெரிந்து இருக்க மாட்டார்கள், எளிமையாக சொல்லவேண்டும் என்றால் புதியதாக தொடங்கும் தனியார் நிறுவனம் அதுவும் தொடங்கி ஒரு 5 ஆண்டு இருக்கும் நிறுவனங்களை ஸ்டார்ட்அப் நிறுவனம் என்று கூறலாம்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய சந்தை, வளர்ந்து வரும் பொருளாதாரம் நிலை, வளர்ச்சியடைந்து வரும் நுகர்வோர் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் ஆகியவை தான் முதற்காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய பதிவில் நாம் முதலில் What is Unicorn? என்பதை பற்றியும், 2022-ஆம் ஆண்டு எந்த நிறுவனங்கள் இந்தியாவில் இந்த யுனிகார்ன் (unicorn) அந்தஸ்தை பெற்றுள்ளன என்று பார்க்கலாம் வாங்க!.

What is Unicorn and its Meaning in Tamil?

நாம் அடிக்கடி சோசியல் மீடியாவிலும் (Social Media) மற்றும் செய்தி சேனல் மூலமாகவும் கேள்விப்பட்டு இருப்போம். உதாரணத்திற்கு Byjus என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் Unicorn அந்தஸ்தை பெற்றுள்ளன என்று நாம் வலைத்தளங்கள் மற்றும் செய்திகளின் மூலம் படித்து இருப்போம். ஆனால் சில பேருக்கு யுனிகார்ன் என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்கலாம்.அதனை விளக்குவதற்காக தான் இந்த பதிவு. Unicorn என்பது அந்த தனியார் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் (Billion) அமெரிக்க டாலர் கொண்டதாக இருக்கும், நமது இந்திய மதிப்பில் சொல்லவேண்டும் என்றால் 100 கோடி மதிப்பு கொண்ட நிறுவனம் என்பது தான். இதைத்தான் Unicorn அந்தஸ்து பெற்றுள்ள நிறுவனம் என்று சொல்லுவார்கள். இந்த மதிப்பு சில காரணிகளை கொண்டு மதிப்பட படுகிறது. சமீபத்தில் இந்தியா இதில் புதிய மைல்கல்லை எட்டியது, 100+ தனியார் நிறுவனங்கள் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேல் உள்ளது என்று யுனிகார்ன் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

GST Meaning in Tamil | GST என்றால் என்ன ?

List of Unicorn companies in india 2022

நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 19 புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த யுனிகார்ன் கிளப்பில் சேர்ந்துள்ளன. கிழே அந்த நிறுவனத்தின் பெயர், மற்றும் அதன் மதிப்பு எவ்ளோ என்று பல தரவுகளை கொண்டு குறிப்பிட்டுளோம்.

Company Name Industry Valuation 
PhysicsWallahEdtech$1.1 Billion
LeadSquaredSaaS- CRM$1 Billion
ElasticRunE-commerce Logistics$1.5 Billion
LEAD SchoolEdtech$1.1 Billion
PurplleE-com Personal Care$1.1 Billion
DealShareEcommerce$1.7 Billion
XpressbeesE-commerce Logistics$1.2 Billion
OpenFintech$1 Billion
Games24x7Gaming$2.5 Billion
AmagiMedia, Advertising$1 Billion
Fractal AnalyticsSaaS- Analytics$1 Billion
DarwinboxSaaS- HR$1.07 Billion
LivspaceE-com Interior Design$1.2 Billion
UniphoreSaaS- Conversational Automation$2.5 Billion
HasuraSaaS- Programming Tools$1 Billion
Yubi (CredAvenue)Fintech$1.3 Billion
CommerceIQE-com Management Platform$1 Billion
OxyzoFintech$1 Billion
OneCardFintech$1.4 Billion

 

மேலும் இது போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> அர்த்தம்