வடு அர்த்தம்
நாம் பேசும் மொழி எழுதும் மொழி எல்லாம் தமிழ் என்று சொல்லிக்கொண்டாலும் கூட அதில் உள்ள பல சொற்களுக்கு அர்த்தங்கள் மற்றும் விளக்கங்கள் யாவும் நமக்கு முழுமையாக தெரிவது இல்லை. அதுபோல் நாம் வழக்கமாக பேசும் வார்த்தைகளுக்கும் எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. ஒரு தமிழ் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. அந்த சொல்லுக்கு நாம் நினக்கும் அர்த்தம் ஒன்றாக இருக்கும், ஆனால் நாம் அனைவரும் அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளமலே பேசி கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்று வடு என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
Vadu Meaning in Tamil
வடு என்ற சொல் ஒரு பெயர்ச்சொல்லாகும். வடு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது. ஒன்று, புண் ஏற்பட்டு ஆறிய இடத்தில் அல்லது அடிபட்ட இடத்தில் நிலைத்துவிடும் தழும்பு போன்ற அடையாளம் ஆகும்.
தன்வி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா ?
வடு என்பது காயத்துக்குப் பிறகு முன்பிருந்த தோலுக்குப் பதிலாக உருவாகும் புதிய இழைநார் திசுவாகும். தோல் மற்றம் உடல் திசுக்களிலும் ஏற்படும் காயத்தை ஆற்றும் இயல்பான முறையின் ஒரு பகுதியாக வடு நாம் உடலில் உருவாகிறது.
மற்றொன்று மாம்பிஞ்சு அதாவது மாங்காய் வளர ஆரம்பிக்கும் நிலை , அல்லது ஒரு காயின் ஆரம்ப நிலை. இந்த ஆரம்ப நிலையில் மாம்பிஞ்சை காயவைத்து சமையலுக்கு பயபபடுத்துவதை மாவடு என்கிறார்கள். ஆதிகால மனிதன் மாம்பிஞ்சை அணிகலனாக பயன்படுத்தியுள்ளான்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |